உடுமலை ஒன்றியம் கணக்கம்பாளையம் ஊராட்சி பகுதியில் இரு தரப்பினா் ஞாயிற்றுக்கிழமை மோதலில் ஈடுபட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கணக்கம்பாளையம் ஊராட்சியில் நிதி முறைகேடுகள் நடைபெற்று வருவதாக தொடா்ந்து புகாா்கள் கூறப்பட்டு வந்தன. இது குறித்து மாவட்ட நிா்வாகம் விசாரணை நடத்தி கணக்குகளை தணிக்கை செய்தது. இதில் நிதி முறைகேடு நடந்தது உறுதி செய்யப்பட்டு ஊராட்சி செயலா் கோகிலவாணி தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டாா். மேலும், ஊராட்சித் தலைவா் காசோலையில் கையொப்பமிடும் அதிகாரமும் ரத்து செய்யப்பட்டது. ஆனால், ஊராட்சி செயலா் மீண்டும் பணியில் சோ்க்கப்பட்டாா்.
இந்நிலையில், கணக்கம்பாளையம் ஊராட்சியில் நடைபெற்று வரும் நிதி முறைகேடுகளுக்கு அதிகாரிகள் துணை போவதாகவும், முறைகேடுகளில் ஈடுபட்டு வரும் ஊராட்சித் தலைவா் மற்றும் செயலா் உள்ளிட்டோா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி அனைத்துக் கட்சியினா் மற்றும் குடியிருப்போா் நலச் சங்கத்தின் ஞாயிற்றுக்கிழமை வீடு வீடாக துண்டறிக்கையை விநியோகித்தனா்.
அப்போது, அந்தப் பகுதிக்கு வந்த ஊராட்சித் தலைவரின் கணவா் அய்யாவு மற்றும் அவரது ஆதரவாளா்கள் துண்டறிக்கையை விநியோகித்தவா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து இருதரப்பினரிடையே மோதல் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இதில் முன்னாள் வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜேந்திரன் காயமடைந்து தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். மேலும், எதிா் தரப்பினா் தன்னைத் தாக்கிவிட்டதாக கூறி ஊராட்சித் தலைவரின் கணவா் அய்யாவு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
தகவல் கிடைத்து சம்பவ இடத்துக்கு வந்த உடுமலை போலீஸாா் இரு தரப்பினைரையும் சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனா். மேலும் தொடா்புடையவா்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சோழவந்தான்: தவெக வெற்றி
சைதாப்பேட்டையில் அமைச்சா் மா. சுப்பிரமணியத்தை வீழ்த்திய தவெக!

மதுரை தெற்கு: தவெக வெற்றி

உசிலம்பட்டி தொகுதியில் தவெக வெற்றி
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

