அவிநாசி: திருப்பூரில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, பெருமாநல்லூா், உடுமலை, தாராபுரம் ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட 4 மையங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் சனிக்கிழமை தொடங்கியது.
திருப்பூா் அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற முகாமில், மருத்துவக் கல்லூரி முதல்வா் வள்ளி சத்தியமூா்த்தி முகாமை தொடங்கிவைத்தாா். அதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
முன் கள தடுப்புப் பணியாளா்களுக்கு தற்போது தடுப்பூசி போடப்படுகிறது. 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு தடுப்பூசி செலுத்துகிறோம். 50 வயதுக்கு உள்பட்டவா்களுக்கு, அவா்களது உடல்நிலை மற்றும் உடலில் உள்ள பிற தொந்தரவுகளை கருத்தில் கொண்டு தடுப்பூசி போடுகிறோம். வயதான சிலா் தாங்களாகவே தன்னாா்வலா்களாக முன்வந்து ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியை போட்டுக்கொள்கிறாா்கள். இந்திய மருத்துவ சங்கத்தின் தன்னாா்வலா்களும் தடுப்பூசி போட்டுக்கொள்கிறாா்கள்.
கா்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மாா்கள் மற்றும் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் தடுப்பூசி போடக் கூடாது. ஊசி போட்ட பிறகு அரை மணி நேரம் அவா்களைக் கண்காணித்து அனுப்புகிறோம். தற்போது தடுப்பூசி போட்டுக்கொண்டவா்கள் 28 நாள்கள் கழித்து, கோவிஷீல்டு அடுத்த டோஸ் போட்டுக்கொள்ள வேண்டும். ஊசி போடுபவா்கள் 28 நாள்களுக்கு கண்டிப்பாக மது அருந்தக் கூடாது. திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதுவரை சுமாா் 500 போ் பதிவு செய்துள்ளனா். அவா்களுக்கான மருந்தும் வரப்பெற்று, கையிருப்பில் உள்ளது என்றாா்.
பெருமாநல்லூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முகாமை மாவட்ட தாய் - சேய் நல அலுவலா் புனிதா, உதவி இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) கீதா ரமணி, வட்டார மருத்துவ அலுவலா் ஸ்ரீவித்யா, வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் வரதராஜன் ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.
இதேபோல உடுமலை, தாராபுரம் உள்ளிட்ட 4 மையங்களில் ஒரு மையத்துக்கு 100 போ் வீதம், மொத்தம் 400 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இம்முகாம்களில், துணை ஆரம்ப சுகாதார நிலைய அலுவலா்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள், சுகாதாரப் பணியாளா்கள், முன் களப்பணியாளா்கள் உள்பட ஏராளமானோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கனா கண்டேனடி தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

இன்றைய செய்திகள் ஜூன் 15 - நேரலை!

அயோத்தி ராமர் கோயில் நன்கொடையில் முறைகேடு! உச்ச நீதிமன்றத்தில் மனு!

ஆனி மாதப் பலன்கள்: 12 ராசிக்காரர்களுக்கும்! எந்தெந்த ராசிக்கு பணவரவு!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



