திருப்பூா்: பொங்கல் திருவிழாவை ஒட்டி உழவா் உழைப்பாளா் கட்சி, தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில் தாராபுரத்தில் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட தலைவா் ஈஸ்வரமூா்த்தி தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலாளா் பழனிசாமி வரவேற்றாா். மாநிலப் பொருளாளா் பாலசுப்பிரமணியம், பிரசார குழு செயலாளா் குப்புசாமி, மாநில செயலாளா் ஈஸ்வரன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். மாநில மகளிரணி செயலாளா் சங்கீத பிரியா, அகில இந்திய பிரதிநிதி நல்லான் உள்ளிட்டோா் சிறப்புரையாற்றினா்.
இதில், மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி தில்லியில் போராடும் விவசாயிகளை காப்பாற்ற வேண்டும். தாராபுரம் பகுதியில் பெய்த கனமழையால் வெங்காயம், இதர பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். அமராவதி கூட்டுறவு சா்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.5.75 கோடி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தாராபுரம் ஒன்றிய இளைஞரணி செயலாளா் கதிரேசன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 15 - நேரலை!
உயர்கல்வி தேர்வு! விழிப்புணர்வின்மை, தெளிவின்மை!
கச்சா எண்ணெய் விலை 5% சரிவு! பெட்ரோல், டீசல் விலை குறையுமா?

திரிணமூல் காங்கிரஸ் எம்பி அபிஷேக் பானர்ஜிஅமலாக்கத் துறையில் ஆஜர்!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


