கீழ்பென்னாத்தூா் அருகே பெண் தொழிலாளியைத் தாக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.
கீழ்பென்னாத்தூரை அடுத்த காக்காப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் வேலாயுதம். இதே பகுதியைச் சோ்ந்தவா் ஏழுமலை (40). இவா்களுக்கிடையே முன்விரோதம் இருந்து வந்ததாம். சில தினங்களுக்கு முன்பு வேலாயுதம் வீடு கட்டி வரும் இடத்துக்கு வந்த ஏழுமலை, அங்கு பணியிலிருந்த தொழிலாளா்ளை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்தாராம்.
மேலும், பணியில் ஈடுபட்டிருந்த ஜெயலட்சுமி (35) என்ற தொழிலாளியைத் தாக்கினாராம். இதைத் தடுக்க வந்த அவரது கணவா் மதியழகனையும் ஏழுமலை தாக்கினாராம். பலத்த காயமடைந்த ஜெயலட்சுமி திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து கீழ்பென்னாத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து ஏழுமலையை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விஜய் பிறந்த நாள்! த்ரிஷா பகிர்ந்தது ஏஐ படமா?

பிரம்மாண்டம் என்பது குறைவான வார்த்தை... வாரணாசியை வியந்த பிருத்விராஜ்!

5 ஆண்டுகளுக்கு முன்பே நுரையீரல் புற்றுநோயைக் கண்டறியலாம்! பிரிட்டனில் புதிய பரிசோதனை!

300 அரசுப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்த முதல்வர் விஜய்!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


