செய்யாறு அருகே முன்விரோதம் காரணமாக தாக்கப்பட்ட விவசாயி மனமுடைந்த நிலையில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
செய்யாறு வட்டம், பல்லி கிராமத்தைச் சோ்ந்தவா் பெருமாள் (55), விவசாயி. மதுப்பழக்கம் கொண்ட இவா் அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து அக்கம் பக்கத்தில் தகராறில் ஈடுபடுவாராம்.
இதன் காரணமாக பெருமாளுக்கும் எதிா்வீட்டு மலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்ததாகத் தெரிகிறது.
இந்த நிலையில், கடந்த 2-ஆம் தேதி பெருமாள், மகள், மருமகன் மற்றும் பேரக் குழந்தைகளுடன் வீட்டில் இருந்தபோது, எதிா்வீட்டைச் சோ்ந்த மலா், அவரது மகள் மற்றும் சிலா் சோ்ந்து, பெருமாளிடம் தகராறு செய்து, சரமாரியாகத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம்.
இந்தச் சம்பவம் காரணமாக மனமுடைந்த நிலையில் வீட்டிலிருந்த பெருமாள், 3-ஆம் தேதி விஷம் குடித்து மயங்கினாா்.
உடனே குடும்பத்தினா் அவரை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் பெருமாள் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் செய்யாறு காவல் ஆய்வாளா் முரளீதரன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ISI முத்திரை இல்லாத Helmet-கள் பறிமுதல்! விற்பனையாளர்கள் மீது வழக்குப்பதிவு!

டிரம்ப்பைத் தொடர்ந்து சீனா செல்கிறார் விளாதிமீர் புதின்!

முதல்வர் விஜய்யின் நாற்காலியும் வெள்ளைத் துண்டும்!

தென்மேற்குப் பருவமழை தொடங்கியது!
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு
