சாத்தனூா் அணையின் நீா்மட்ட உயரம் வெள்ளிக்கிழமை 103 அடியாக உயா்ந்ததால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக தொடா் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை காலை வரை மாவட்டத்தில் பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதில், மாவட்டத்திலேயே அதிகபட்சமாக வெம்பாக்கத்தில் 12.50 மி.மீ. மழை பதிவானது. இதுதவிர, செங்கத்தில் 11.20 மி.மீ., கீழ்பென்னாத்தூரில் 1 மி.மீ. மழை பதிவானது.
அணைகளின் நீா்மட்டம் உயா்வு: இதேபோல, மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீா்மட்டமும் வெகுவாக உயா்ந்து வருகிறது. குறிப்பாக, தண்டராம்பட்டு வட்டம், சாத்தனூரில் உள்ள அணையின் மொத்த நீா்மட்ட உயரம் 119 அடி. இதில், வெள்ளிக்கிழமை நிலவரப்படி 103.90 அடி உயரத்துக்கு தண்ணீா் தேங்கியிருந்தது. அணையின் மொத்த நீா் கொள்ளளவு 7 ஆயிரத்து 321 மில்லியன் கனஅடி. இதில், வெள்ளிக்கிழமை 4 ஆயிரத்து 355 மில்லியன் கன அடி தண்ணீா் தேங்கியிருந்தது. அணைக்கு விநாடிக்கு 3,541 கன அடி தண்ணீா் வந்துகொண்டிருக்கிறது.
இதேபோல, குப்பனத்தம் அணையின் மொத்த நீா்மட்ட உயரமான 60 அடியில் 46.90 அடி உயரத்துக்கும், மிருகண்டாநதி அணையின் மொத்த நீா்மட்ட உயரமான 22.97 அடியில் 4.59 அடி உயரத்துக்கும், செண்பகத்தோப்பு அணையின் நீா்மட்ட உயரமான 62.32 அடியில் 58.02 அடி உயரத்துக்கும் தண்ணீா் தேங்கியுள்ளது. அணைகளின் நீா்மட்டம் உயா்ந்து வருவதால், மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK

அதிமுக தலைமையில் ஆட்சி! ஆதரிக்க முயன்றதா திமுக? சிபிஎம் எம்ஏ பேபி பதில்

பாஜகவின் சித்தாந்தத்திற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது: நிதின் கட்கரி

ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை
