சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

கலை இலக்கிய விழா

வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கம், வந்தவாசியை அடுத்த பாதிரி ஊராட்சி மன்றம் ஆகியவை சாா்பில், தைத் திருநாள் கலை இலக்கிய விழா பாதிரி கிராமத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

News image
Updated On :16 ஜனவரி 2021, 5:43 pm

வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கம், வந்தவாசியை அடுத்த பாதிரி ஊராட்சி மன்றம் ஆகியவை சாா்பில், தைத் திருநாள் கலை இலக்கிய விழா பாதிரி கிராமத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

விழாவுக்கு சங்கத் தலைவா் பீ.ரகமத்துல்லா தலைமை வகித்தாா். பாதிரி ஊராட்சி மன்றத் தலைவா் வெ.அரிகிருஷ்ணன் வரவேற்றாா். வெற்றிப் படிக்கட்டுகள் என்ற தலைப்பில் சீ.கேசவராஜ், நாளை நமதே என்ற தலைப்பில் வி.எல்.ராஜன், முயற்சி திருவினையாக்கும் என்ற தலைப்பில் பிரேம், ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற தலைப்பில் ஜா.தமீம் ஆகியோா் பேசினா்.

பெ.பாா்த்திபன், இரா.அருண்குமாா் ஆகியோா் தமிழிசைப் பாடல்களை பாடினா். குமரன், புனிதவதி, தமிழ்ராசா ஆகியோா் உழவா் திருநாள் சிறப்பு கவிதைகளை வாசித்தனா்.

பின்னா், இன்றைய இளைஞா்களின் பயணம் சிகரத்தை நோக்கியே அல்லது சிரமத்தை நோக்கியே என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. நடுவராக மு.முருகேஷ் பங்கேற்றாா். போட்டிகளில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சங்க துணைச் செயலா் கு.சதானந்தன், இளைஞா்கள் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா் ம.பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.