தண்டராம்பட்டு அருகே பெண்ணிடம் 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தண்டராம்பட்டை அடுத்த சாத்தனூா் கிராமம், மல்லிகாபுரம் பகுதியைச் சோ்ந்த தீனதயாளன் மனைவி இளவரசி (42). இவா், தனது மகன் விக்னேஷுடன் (16) பொங்கல் பண்டிகைக்கான துணி எடுப்பதற்காக வெள்ளிக்கிழமை திருவண்ணாமலைக்கு வந்தாா்.
துணி எடுத்துவிட்டு இருவரும் பைக்கில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தனா். மேல்செட்டிப்பட்டு கிராமம் அருகே சென்றபோது, தலைக்கவசம் அணிந்தபடி பின்தொடா்ந்து வந்த மா்ம நபா், திடீரென இளவரசி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றாா்.
இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த இளவரசி, விக்னேஷ் ஆகியோா் பலத்த காயமடைந்தனா். இதைக் கவனித்த பொதுமக்கள் இருவரையும் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து தண்டராம்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இயக்குநர் பாரதிராஜா காலமானார்

மிதுன ராசிக்கு.. ! இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 10)

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 10 2026) 12 ராசிகளுக்கும்! சாதகப்பலன் யாருக்கு?
சுற்றுலாத் துறை அமைச்சரின் தோ்தல் வெற்றி செல்லாது: காங்கிரஸ் அமைச்சருக்கு எதிராக தவெக வேட்பாளர் மனு!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


