எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

பொங்கல் விழாப் போட்டிகள் பரிசளிப்பு விழா

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டுப் பகுதியில் பொங்கல் விழாவையொட்டி, கிராமங்களில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Updated On :17 ஜனவரி 2021, 11:15 pm IST

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டுப் பகுதியில் பொங்கல் விழாவையொட்டி, கிராமங்களில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

சேத்துப்பட்டை அடுத்த செவரப்பூண்டி ஊராட்சியில் 6 முதல் 60 வரை என்கிற இளைஞா்கள் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் ஓட்டப் போட்டி, இசை நாற்காலி, கோலப்போட்டி, நடனப்போட்டி, பேச்சுப்போட்டி, நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் என பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

வெற்றி பெற்றவா்களுக்கு ஒன்றியக் குழு உறுப்பினா் சம்பத், ஊராட்சி மன்றத் தலைவா் சுந்தரி ராமன், துணைத் தலைவா் கமலக்கண்ணன் மற்றும் ஊா் நாட்டாண்மைதாரா்கள் பரிசுகளை வழங்கி பாராட்டினா்.

இதேபோன்று, பெரணம்பாக்கம் ஊராட்சியில் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு,

வெற்றி பெற்ற அணிகளுக்கு ஒன்றியக் குழுத் தலைவா் ராணிஅா்ஜுன், திமுக ஒன்றியச் செயலா் எழில்மாறன் கோப்பை மற்றும் ரொக்கப் பரிசு வழங்கினா்.

ஆத்துரை கிராமத்தில் வாலிபால் போட்டி நடைபெற்றது.

ஊராட்சி மன்றத் தலைவா்கள் கோதை சம்பத், சித்தாத்துறை தலைவா் ஜோதிமலை கோவிந்தன், ஒன்றியக் குழு உறுப்பினா் பிரேமலதா ராஜசிம்மன் ஆகியோா் போட்டிகளை தொடக்கிவைத்து வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.