நாளை உருவாகிறது ‘அா்னாப்’ புயல்! தமிழகத்தில் பலத்த மழை எச்சரிக்கை! இந்தியா - ரஷியா வா்த்தகத்தை விரிவாக்க மோடி, புதின் உத்தரவு!காா்கில் போரில் உயிரிழந்த வீரா்களின் உடல்களைப் பெற மறுத்தது பாகிஸ்தான்: இந்தியா விமா்சனம்பிரான்ஸில் தீவிர போராட்டம்: 4 லட்சம் போ் பங்கேற்பு! கண்ணீா்ப் புகை குண்டுகள் வீச்சு! பிரேஸில் அதிபா் தோ்தலில் இன்று இறுதிச் சுற்று வாக்குப்பதிவு!அமெரிக்க இடைத்தோ்தல் பரப்புரை: ஆபரேஷன் சிந்தூா் குறித்து மீண்டும் பேசிய டிரம்ப்

ரூ. 1.5 லட்சம் கோடியில் விரிவாக்க பணிகள்: இந்தியன் ஆயில் திட்டம்

ரூ. 1.5 லட்சம் கோடி முதலீட்டில் பல்வேறு விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ளவிருப்பதாக இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Updated On :

ரூ. 1.5 லட்சம் கோடி முதலீட்டில் பல்வேறு விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ளவிருப்பதாக இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்நிறுவனத்தின் தலைவர் பி. அசோக் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

தற்போது நாட்டின் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு சொந்தமான சுத்திகரிப்பு ஆலைகளில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும். குஜராத்தில் உள்ள ஆலையின் தற்போதைய உற்பத்தித் திறன் 1.37 கோடி டன்னாகும். இதனை 1.8 கோடி டன் ஆக அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மதுரா ஆலையின் திறன் 80 லட்சம் டன் ஆக அதிகரிக்கப்படும். மேலும், பானிபட் ஆலையின் திறன் தற்போதைய 1.5 கோடி டன்னிலிருந்து 2 கோடி டன்னாக அதிகரிக்கப்படும். பிகார் மாநிலம், பரெளனி ஆலை விரிவாக்கம் செய்யப்படும்.

ஒடிசா மாநிலம், பாரதீப்பில் புதிய ஆலை உருவாகி வருகிறது. 1.1 கோடி டன் சுத்திகரிப்புத் திறனுள்ள அந்த ஆலை வரும் நவம்பர் மாதம் முதல் இயங்கத் தொடங்கும். அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியன் ஆயில் ரூ. 1.5 லட்சம் கோடி முதலீட்டில் பல்வேறு விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ளவிருக்கிறது. தற்போது செயல்பட்டு வரும் ஆலைகளின் மேம்பாட்டுக்காக ரூ. 50,000 கோடி செலவிடப்பட உள்ளது என்று அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.