ரிக்க்ஷாவில் சைட் கார் -ஆட்டோ மொபைலில் புது முயற்சி

முந்தானை முடிச்சு படத்தில் பாக்யராஜ் மனைவி கல்பனாவை தன் ஸ்கூட்டரில்...
ரிக்க்ஷாவில்  சைட் கார் -ஆட்டோ மொபைலில் புது முயற்சி
Updated on
1 min read

முந்தானை முடிச்சு படத்தில் பாக்யராஜ் மனைவி கல்பனாவை தன் ஸ்கூட்டரில் இணைக்கப் பட்ட சைட் காரில் உட்கார வைத்து அழைத்துச் செல்வார் பார்த்திருக்கிறீர்களா?அந்த முயற்சி அதிகம் வெற்றி பெறவில்லையோ  என்னவோ!அப்படியான ஸ்கூட்டர் மாடல்களை பிறகு பார்க்க முடியவில்லை இப்போது புதிதாக ஆட்டோ ரிக்க்ஷாக்களில் சைட் கார் இணைத்து புதிய மாடல் ரிக்க்ஷாக்களை விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கிறார்கள். 

கொரிய மற்றும் பிலிப்பைன்ஸ் விஞ்ஞானிகளின் கூட்டு முயற்சியில் வெளியிடப் பட்டுள்ள இந்த சைட் கார் ஆட்டோ ரிக்க்ஷாக்களின் கட்டுமானத்தில் பெருமளவு மணிலா  ஃபைபர் பயன்படுத்தப்பட்டுள்ளது.மணிலா பைபருக்கு ஹெம்ப்,அபாகா பைபர்,என்ற மற்ற பெயர்களும் உண்டு,இது பிலிப்பைன் தலைநகர் மணிலாவில் அதிகம் விளைவதால் இதை மணிலா  ஃபைபர்  என்றும் அழைக்கிறார்கள்.பயணிகள் சுமை தாங்கும் ஆட்டோமெபைல் கட்டுமானத்தில் எடை குறைவான இந்த மணிலா  ஃபைபர் மூலப்பொருட்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டிருப்பது வாகனத்தின் எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.

உள்நாட்டில் உற்பத்தியாகும்  அபாகா பைபர் சைட்கார்  கட்டுமான மூலப்பொருட்களில் 60 % பயன்படுத்தப்படுவதால் அதன் எடை  குறைவதோடு அதன் பயன்பாடும் எளிமையாக மாற்றப்பட்டுள்ளதாக இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ள கொரிய மற்றும் பிலிப்பைன்ஸ் விஞ்ஞானிகள் கூட்டமைப்பு  (DOST -ITDI) தெரிவித்துள்ளது .மேலும் எடை குறைவு என்பதால் இந்தப் புதியவகை ரிக்க்ஷாக்கள் இயங்க தற்போது பயன்பாட்டில் இருக்கும் மூன்று சக்கர வாகனங்களைக் காட்டிலும் குறைவான ஆற்றலே தேவைப்படும்என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கின்றனர். 

பயணிகள் மற்றும் பயன்படுத்துவோரை ஈர்க்கும் பல அம்சங்கள் இந்த சைட் கார் ஆட்டோ ரிக்க்ஷாக்களில் இருந்தாலும் பயணிகளின் பாதுகாப்பு காரணங்களுக்காக இதன்  உயரம், பயன்பாட்டளவு மற்றும் வலிமை போன்றவை இன்னும் சில ஆராய்ச்சிகளின் மூலம்  பரிசோதிக்கப்பட வேண்டும் என்று இதனை ஆய்வு செய்த பிலிப்பைன்ஸ் நாட்டு போக்குவரத்து மற்றும் சுற்றுப்புற மேலாண்மை நிர்வாகத் துறை (NCTS )தலைவர் திரு.வெர்கெல் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com