மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு!ரூ. 200 கோடியைக் கடந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வசூல்!2025-26-ல் மத்திய அமைச்சர்களின் தில்லி வீடுகளைப் பழுதுபார்க்க ரூ.92 கோடி செலவு!திருமலையில் காலிபிளவர் உணவு வகைகளுக்குத் தடை!இம்ரான் கானுக்கு உயர் சிகிச்சை: கபில்தேவ் உள்ளிட்ட சர்வதேச முன்னாள் கேப்டன்கள் கடிதம்!மகாராஷ்டிரம்: ஏரிக்கு அருகே ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்! இந்திய வீரர் கரண் சர்மா அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!

வர்த்தக வாகன விற்பனை 25% உயரும்: டாடா மோட்டார்ஸ்

நடப்பு நிதி ஆண்டில் வர்த்தக வாகனங்கள் விற்பனை 25 சதவீதம் வளர்ச்சி காணும் என்று டாடா மோட்டார்ஸ் நம்பிக்கை தெரிவித்தது.

Published On :22 ஜூலை 2025, 2:57 pm IST

நடப்பு நிதி ஆண்டில் வர்த்தக வாகனங்கள் விற்பனை 25 சதவீதம் வளர்ச்சி காணும் என்று டாடா மோட்டார்ஸ் நம்பிக்கை தெரிவித்தது.
 இதுகுறித்து அந்நிறுவனத்தின் செயல் இயக்குநர் ரவி பிஷாரடி (வர்த்தக வாகனப் பிரிவு) கூறியதாவது:
 நடப்பு நிதி ஆண்டில் டாடா வர்த்தக வாகனங்கள் விற்பனை 25 சதவீத வளர்ச்சி காணும்.
 நடப்பு காலாண்டில் முதல் இருமாதங்களில் வர்த்தக வாகன விற்பனை சூடுபிடித்துள்ளது. மார்ச் மாதத்தில் விற்பனை மேலும் சிறப்பாக இருக்கும்.
 அடுத்த நிதி ஆண்டிலும் இதே நிலை தொடரும். எனினும், நடப்பு நிதி ஆண்டுடன் ஒப்பிடும் போது அடுத்த நிதி ஆண்டில் விற்பனை வளர்ச்சி சற்று குறைவாகவே இருக்கும். குறிப்பாக, முதல் அரையாண்டை விட, இரண்டாவது அரையாண்டு காலத்தில் வாகன விற்பனை சிறப்பானதாக இருக்கும்.
 2017 ஏப்ரல் முதல் பிஎஸ்-ஐய வாகனத் தரக்கட்டுப்பாட்டு விதிமுறைகள் நடைமுறைக்கு வரவுள்ளதையடுத்து, வாகன விற்பனை 10-15 சதவீதம் உயரும்.
 25 ஹைபிரிட் பஸ்களை வழங்குவதற்காக மும்பை நகராட்சியுடன் ஏற்கெனவே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான, இறுதி உத்தரவு கூடிய விரைவில் பெறப்பட உள்ளது என்று ரவி பிஷாரடி தெரிவித்தார்.
 டீசல் மற்றும் மின்சாரத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஹைபிரிட் பஸ்ஸின் விலை (ஆண்டு பராமரிப்பு செலவு உள்பட) ரூ. 2 கோடிக்கும் அதிகம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.