மாநிலங்களவைத் தோ்தல் வேட்புமனு நிராகரிப்பு: மீனாட்சி நடராஜனின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைஇல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!
/

ரிசர்வ் வங்கி அறிவிப்பு எதிரொலி! சென்செக்ஸ் 577 புள்ளிகள் உயர்வு

வட்டி விகிதம் குறித்த ரிசர்வ் வங்கியின் அறிவிப்பால் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் வியாழக்கிழமை சூடுபிடித்து காணப்பட்டது. இதன் காரணமாக சென்செக்ஸ் 577 புள்ளிகள் உயர்ந்தது.

News image
Updated On :6 ஏப்ரல் 2018, 12:39 am IST

வட்டி விகிதம் குறித்த ரிசர்வ் வங்கியின் அறிவிப்பால் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் வியாழக்கிழமை சூடுபிடித்து காணப்பட்டது. இதன் காரணமாக சென்செக்ஸ் 577 புள்ளிகள் உயர்ந்தது.
நடப்பு நிதி ஆண்டுக்கான முதல் நிதிக் கொள்கையை ரிசர்வ் வங்கி வியாழக்கிழமை வெளியிட்டது. அதில், பணவீக்கத்தில் காணப்படும் நிச்சயமற்ற தன்மையை கருத்தில் கொண்டு வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் எதையும் செய்யவில்லை என தெரிவித்தது. மேலும், நடப்பு நிதியாண்டில் 7.4 சதவீத பொருளாதார வளர்ச்சி எட்டப்படும் என்று நிதிக் கொள்கையில் ரிசர்வ் வங்கி நம்பிக்கை தெரிவித்தது.
ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பு பங்குச் சந்தையில் உற்சாகத்தை ஏற்படுத்தியது. முதலீட்டாளர்கள் அதிக அளவில் பங்குகளை வாங்கி குவித்தனர்.
இதையடுத்து, வங்கித் துறை குறியீட்டெண் 2.78 சதவீதமும், ரியல் எஸ்டேட் 2.55 சதவீதமும், மோட்டார் வாகனத் துறை குறியீட்டெண் 1.76 சதவீதமும் அதிகரித்தன.
கோட்டக் மஹிந்திரா வங்கி பங்கின் விலை 3.38 சதவீதமும், யெஸ் வங்கி 2.36 சதவீதமும், பாரத ஸ்டேட் வங்கி 4.66 சதவீதமும், பெடரல் வங்கி 2.36 சதவீதமும், பஞ்சாப் நேஷனல் வங்கி 3.02 சதவீதமும், பேங்க் ஆஃப் பரோடா வங்கி பங்கின் விலை 5.72 சதவீதமும் ஏற்றம் கண்டன. 
ரியல் எஸ்டேட் துறையைப் பொருத்தவரையில், கோத்ரெஜ் ப்ராப்பர்ட்டீஸ் பங்கின் விலை 1.46 சதவீதமும், பிரஸ்டீஜ் எஸ்டேட்ஸ் புராஜக்ட்ஸ் 3.03 சதவீதமும், ஓபராய் ரியால்டி 0.38 சதவீதமும் அதிகரித்தன.
மஹிந்திரா அண்டு மஹிந்திரா பங்கின் விலை 1.88 சதவீதமும், டாடா மோட்டார்ஸ் 2.22 சதவீதமும், பஜாஜ் ஆட்டோ 1.22 சதவீதமும் உயர்ந்தன.
மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 577 புள்ளிகள் அதிகரித்து 33,596 புள்ளிகளாக நிலைத்தது.
தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 196 புள்ளிகள் உயர்ந்து 10,325 புள்ளிகளாக நிலைபெற்றது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.