

இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் பொறியியல் சாதனங்களின் மதிப்பு கடந்த 2017-18-ஆம் நிதியாண்டில் 7,600 கோடி டாலராக (சுமார் ரூ.5 லட்சம் கோடி) அதிகரித்துள்ளதாக பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (இஇபிசி) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இஇபிசி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நாட்டின் ஏற்றுமதியில் 25 சதவீதம் பங்கு வகிக்கும் பொறியியல் சாதனங்களின் ஏற்றுமதி கடந்த 2016-17-ஆம் நிதியாண்டில் 6,523 கோடி டாலராக (சுமார் ரூ. 4.3 லட்சம் கோடி) இருந்தது.
எனினும், பொறியியல் உற்பத்தித் துறையின் அபாரமான செயல்பாட்டின் காரணமாக, கடந்த 2017-18-ஆம் நிதியாண்டில் இந்த ஏற்றுமதி 17 சதவீதம் அதிகரித்து 7,600 கோடி டாலராக உயர்ந்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.