பொதுத் துறையைச் சேர்ந்த பேங்க் ஆஃப் பரோடாவின் முதல் காலாண்டு லாபம் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.
இதுகுறித்து அந்த வங்கி தெரிவித்துள்ளதாவது:
வாராக் கடனுக்கான ஒதுக்கீடு குறைந்ததையடுத்து லாபம் சிறப்பான அளவில் அதிகரித்தது. அதன்படி, நடப்பு 2018-19 நிதி ஆண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) வங்கி நிகர லாபமாக ரூ.528 கோடியை ஈட்டியுள்ளது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் ஈட்டிய லாபம் ரூ.203 கோடியுடன் ஒப்பிடும்போது இது இருமடங்கு உயர்வாகும்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் வாராக் கடனுக்கான ஒதுக்கீடு ரூ.2,477 கோடியிலிருந்து 18.4 சதவீதம் சரிந்து ரூ.1,760 கோடியாக இருந்தது. நிகர வட்டி வருவாய் ரூ.3,405 கோடியிலிருந்து 29 சதவீதம் உயர்ந்து ரூ.4,381 கோடியாக காணப்பட்டது.
வழங்கப்பட்ட கடனில் மொத்த வாராக் கடன் விகிதம் 11.40 சதவீதத்திலிருந்து உயர்ந்து 12.46 சதவீதமாகவும், நிகர வாராக் கடன் விகிதம் 5.17 சதவீதத்திலிருந்து அதிகரித்து 5.40 சதவீதமாகவும் இருந்தது என பேங்க் ஆஃப் பரோடா தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அமைதி வழியில் போராட உரிமை உள்ளது: உச்சநீதிமன்றம்

தாய்மாா்கள் குறித்த கேரள முதல்வரின் கருத்தால் சா்ச்சை!
இந்தியாவின் தொழில் வளா்ச்சியில் தமிழகத்தை முன்மாதிரியாக உருவாக்குவோம்: அமைச்சா் பா்வேஸ்

கோவையில் ஹாக்கி இந்தியா தேசிய ஜூனியா் சாம்பியன்ஷிப்: இன்று தொடக்கம்
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



