போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கடையநல்லூரில் தென்னை மதிப்புக்கூட்டு தொழிற்கூடங்கள் அமையுமா?

திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள தென்னை சாகுபடியை நல்ல முறையில் பயன்படுத்தி மதிப்புக் கூட்டுப் பொருள்களை தயாரிக்கும் தொழிற்கூடங்களும் தொழிற்சாலைகளும்

News image
Updated On :13 ஆகஸ்ட் 2018, 5:20 am

வி.குமாரமுருகன்

திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள தென்னை சாகுபடியை நல்ல முறையில் பயன்படுத்தி மதிப்புக் கூட்டுப் பொருள்களை தயாரிக்கும் தொழிற்கூடங்களும் தொழிற்சாலைகளும் அமைக்கப்பட்டால், இப்பகுதியைச் சேர்ந்த தென்னை விவசாயிகள் பலன் பெறுவதுடன், தொழிற்சாலைகள் மூலம் ஆயிரக்கணக்கானோர் வேலைவாய்ப்பு பெறும் சூழல் உருவாகும்.

கடையநல்லூர் வட்டாரப் பகுதிகளில் சுமார் 3,000 ஹெக்டேர் பரப்பிலும், செங்கோட்டை வட்டாரத்தில் சுமார் 2,500 ஹெக்டேரிலும், தென்காசி வட்டாரத்தில் சுமார் 4,200 ஹெக்டேரிலும், சிவகிரி வட்டாரத்தில் சுமார் 4,500 ஹெக்டேரிலும் தென்னந் தோப்புகள் உள்ளன.

பொதுவாக ஒரு ஹெக்டேர் பரப்பில் உள்ள தென்னை மரங்கள் மூலம் சராசரியாக 12,000 தேங்காய்கள் கிடைக்கும் என விவசாயிகள் தரப்பில் கூறப்படுகிறது. தமிழகத்தைப் பொருத்தவரையில், தேங்காய் என்பது உணவுக்காகவும், எண்ணெய்க்காகவும் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வரும் உணவுப் பொருளாக இருந்து வருகிறது.

ஆனால், அண்டை மாநிலமான கேரளத்தில் தென்னை மரங்கள் மூலம் கயிறு உள்ளிட்ட பல வகைப் பொருள்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகள் நிறுவப்பட்டுள்ளன. இவை சிறு, குறு, நடுத்தரத் தொழில்களாக நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் தேங்காய் பெரும்பாலும் கேரளத்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

பெருமளவு தென்னை மரங்களைக் கொண்ட கடையநல்லூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியிலோ, கடையநல்லூர் பேரவை தொகுதிக்குள்பட்ட பகுதியிலோ தென்னை மரங்களிலிருந்து கிடைக்கும் மூலப்பொருள்களை பயன்படுத்தி மதிப்புக் கூட்டுப் பொருள்களை தயாரிக்கும் வகையிலான தொழிற்சாலைகள் இல்லை. தென்னை நார் (பைபர்) மட்டுமே கடையநல்லூர் வட்டாரத்தில் தயாரிக்கப்படுகிறது. அதுவும் கேரளத்திற்கு அனுப்பப்படுகின்றது. 

அதைப் பயன்படுத்தி கேரளத்தில் கயிறு, சோபா, கார் இருக்கைகள் போன்ற மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்கப்பட்டு அவை வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படுவதுடன், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றது. இத்தொழிலில் அங்கு இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது. கேரளத்தில் கயிறு தயாரிக்கும் தொழிற்கூடங்கள் ஏராளமாக உள்ளன.

கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை, சிவகிரி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கிடைக்கும் தேங்காய்களின் எண்ணிக்கையைக் கொண்டு நோக்கும்போது, கடையநல்லூர் தொகுதியில் சுமார் 2,000 கயிறு திரிக்கும் தொழிற்கூடங்களை அமைக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஒவ்வொரு கயிறு திரிக்கும் தொழிற்கூடம் மூலமாக நேரடியாகவும் மறைமுகமாகவும் 100 பேர் வேலைவாய்ப்பு பெற முடியும் என்கின்றனர் அத்தொழில் குறித்த அனுபவமுள்ளவர்கள். மேலும் தேங்காயிலிருந்து பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்பட்டால் அதன் மூலம் ஆயிரக்கணக்கானோர் வேலை வாய்ப்பு பெற முடியும். 

மேலும், இளநீரை பதப்படுத்தி, பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்ய இயலும். அதற்கு ஏற்றுமதி வாய்ப்பும் உள்ளது. இளநீர் அடிப்படையிலான தொழில்கள் மூலம் மட்டுமே பெரிய அளவிலான வேலைவாய்ப்பை வழங்க முடியும். அது போல் தேங்காய் எண்ணெய் தயாரிப்பதற்காக தேங்காய்களை (கொப்பரை) உலர்த்தும் இயந்திரமும் இப்பகுதியில் இல்லை. தற்போது தேங்காய் எண்ணெய் தயாரிப்பிற்காக ஈரோடு உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு தேங்காய்கள் அனுப்பப்பட்டு, உலர்த்தி பெறப்பட்டு வருகின்றன. அதனால் தேவையற்ற போக்குவரத்து செலவும், தாமதமும் ஏற்படுகிறது. அது போன்ற கொப்பரை உலர்த்தி ஆலைகள் கடையநல்லூரில் நிறுவப்பட்டால், அதன் மூலமும் ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும்.

இந்த வகையில், கடையநல்லூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் விளையும் தேங்காய் பயிர் அடிப்படையிலான ஏராளமான மதிப்புக் கூட்டு பொருள்களை உற்பத்தி செய்யும் தொழில்களை அமைக்க முடியும். இன்று இந்த வகையான தொழிற்சாலைகள் இல்லாததால் இளைஞர்கள் வேலை வாய்ப்பு தேடி வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்குச் செல்ல வேண்டியுள்ளது. எனவே, கடையநல்லூர் பகுதியில் தென்னை மதிப்புக் கூட்டு பொருள்கள் உற்பத்தி தொழிற்சாலைகளை கொண்டு வந்தால் கடையநல்லூர் தொழில் வளத்தில் உயரத்தை எட்டும். தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.