மும்பை பங்குச் சந்தையில் வாரத்தின் தொடக்கதினமான திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகம் 5 மாதங்களில் இல்லாத ஏற்றத்தைக் கண்டது.
அமெரிக்கா-சீனாஇடையே ஏற்பட்டுள்ள வர்த்தகப் போரிலிருந்து முதலீட்டாளர்களின் கவனம் நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகளை நோக்கி திரும்பியுள்ளது. இருந்தபோதிலும், சர்வதேச சந்தைகளில் காணப்பட்ட சாதகமான நிலவரம், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வலுவடைந்தது ஆகியவை பங்கு வர்த்தகத்துக்கு வலு சேர்க்கும் காரணிகளாக
அமைந்தன.
எண்ணெய்-எரிவாயு துறை குறியீட்டெண் 1.46 சதவீதமும், பொறியியல் சாதனங்கள் 1.46 சதவீதமும், மின்சாரம் 1.32 சதவீதமும், உலோக துறை குறியீட்டெண் 1.24 சதவீதமும் உயர்ந்தன.
நிறுவனங்களைப் பொருத்தவரையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கின் விலை 1.96 சதவீதம் அதிகரித்து ரூ.995.65-ஆனது. தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த இன்ஃபோசிஸ் பங்கின் விலை 1.14 சதவீதம் உயர்ந்து ரூ.1,299.15-ஆனது.
டாடா சன்ஸ் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து சைரஸ் மிஸ்திரி தொடர்ந்த வழக்கை தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. டாடா சன்ஸுக்கு ஆதரவாக தீர்ப்பு வெளியானதையடுத்து டாடா குழும நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தது. டாடா மோட்டார்ஸ் பங்கின் விலை 0.81 சதவீதமும், டாடா ஸ்டீல் 0.49 சதவீதமும், டாடா பவர் 2.09 சதவீதமும் அதிகரித்தன.
அதேசமயம், டிசிஎஸ் நிதி நிலை முடிவுகள் செவ்வாய்க்கிழமை (ஜூலை 10) வெளியாவதையொட்டி முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி செயல்பட்டதால் அந்நிறுவனப் பங்கின் விலை 1.34 சதவீதம் சரிவைக் கண்டது.
மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 276 புள்ளிகள் அதிகரித்து 35,934 புள்ளிகளில் நிலைத்தது. இது ஜனவரி 31-க்குப் பிறகு காணப்படும் அதிகபட்ச அளவாகும். தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 80 புள்ளிகள் உயர்ந்து 10,852 புள்ளிகளில் நிலைத்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கொளுத்தும் கோடை வெய்யில்: சூரிய சக்தி மின் உற்பத்தி அதிகரிப்பு

மகளிா் இடஒதுக்கீடு சட்டத் திருத்த மசோதாவை முடக்க திமுக சதி: எல்.முருகன் குற்றச்சாட்டு

வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்

அமெரிக்கா-ஈரான் விரைவில் 2-ஆம் கட்ட பேச்சு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


