மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் புதிய உச்சத்தை தொட்டது.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மேலும் பல பொருள்களுக்கு வரி குறைப்பு செய்ய முடிவெடுக்கப்பட்டது. அதன் எதிரொலியாக, வங்கி, வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருள்கள் துறை பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 222 புள்ளிகள் அதிகரித்து வராலற்றில் முதல் முறையாக 36,718 புள்ளிகளைத் தொட்டு நிறைவடைந்தது. தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 74 புள்ளிகள் உயர்ந்து 11,084 புள்ளிகளில் நிலைத்தது. கடந்த ஜனவரி 29-க்குப் பிறகு காணப்படும் அதிகபட்ச அளவாகும் இது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








