காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ரெப்கோ மைக்ரோ பைனான்ஸ் லாபம் 70% உயர்வு

ரெப்கோ மைக்ரோ பைனான்ஸ் நிகர லாபம் கடந்த நிதி ஆண்டில் 70 சதவீதம் அதிகரித்தது.

News image
Updated On :5 ஜூன் 2018, 7:07 pm

DIN

ரெப்கோ மைக்ரோ பைனான்ஸ் நிகர லாபம் கடந்த நிதி ஆண்டில் 70 சதவீதம் அதிகரித்தது.
இதுகுறித்து அந்நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஆர்.எஸ். இஸபெல்லா கூறியதாவது: கடந்த 2017-18 நிதி ஆண்டில் ரெப்கோ மைக்ரோ பைனான்ஸ் வழங்கிய கடன் தொகை ரூ.700 கோடியாக அதிகரித்துள்ளது. 2016-17 நிதி ஆண்டில் வழங்கிய கடன் தொகையுடன் ஒப்பிடுகையில் இது 48 சதவீத வளர்ச்சியாகும். வருவாய் ரூ.114 கோடியாக உயர்ந்துள்ளது. நிகர லாபம் 70 சதவீதம் அதிகரித்து ரூ.29 கோடியானது. வழங்கப்பட்ட கடனில் மொத்த வாராக் கடன் 0.79 சதவீதமாக உள்ளது.
ரெப்கோ மைக்ரோ பைனான்ஸுக்கு தமிழகம் முழுவதும் 31 மாவட்டங்களில் 80 கிளைகள்உள்ளன. 45,000 சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டு 3 லட்சம் பேர் கடன் திட்டங்களின் மூலம் பயனடைந்துள்ளனர். 
வரும் 2018-19-ஆம் நிதி ஆண்டில் ரூ.1,000 கோடி கடன் வழங்கவும், கிளைகளின் எண்ணிக்கையை 100-ஆக அதிகரிக்கவும் இலக்கு நிர்ணயித்துள்ளோம் என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.