சென்ற ஜனவரியில் செல்லிடப்பேசிகளில் 4ஜி பதிவிறக்க வேகத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மீண்டும் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
இதுகுறித்து இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்காற்று ஆணையத்தின் (டிராய்) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சென்ற ஜனவரி மாதத்தில் செல்லிடப்பேசிகளில் ஜியோ நிறுவனத்தின் 4ஜி பதிவிறக்க வேகம் சராசரியாக 21.3எம்பிபிஎஸ்-ஆக இருந்தது.இது, போட்டியாளராகத் திகழும் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் சராசரி 4ஜி வேகமான 8.8எம்பிபிஎஸ் உடன் ஒப்பிடும்போது இரண்டு மடங்குக்கும் மேல் அதிகம்.
வோடஃபோன் மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனங்களின் பதிவிறக்க வேகம் முறையே 7.2எம்பிபிஎஸ், 6.8எம்பிபிஎஸ்-ஆக இருந்தது.
அதேசமயம், 4ஜி பதிவேற்ற வேகப் பட்டியலில் ஆதித்யா பிர்லா குழுமத்தைச் சேர்ந்த ஐடியா முதலிடத்தைப் பிடித்தது. அதன்படி, இதன் பதிவேற்ற வேகம் சென்ற ஜனவரியில் 6.9எம்பிபிஎஸ்-ஆக இருந்தது. இந்த நிறுவனத்தைத் தொடர்ந்து, வோடஃபோனின் பதிவேற்ற வேகம் 5.5எம்பிபிஎஸ்-ஆகவும், ரிலையன்ஸ் ஜியோ 4.5எம்பிபிஎஸ், ஏர்டெல் 3.9 எம்பிபிஎஸ்-ஆகவும் இருந்தன.
'மைஸ்பீடு' செயலி உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் அடிப்படையில் இந்த புள்ளிவிவரங்கள் கண்டறியப்பட்டதாக டிராய் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சித்ரா பெளர்ணமி விரதமும் பலன்களும்!
ஃபால் - 2 போஸ்டர்!

தமிழகத்தில் திமுக, கேரளத்தில் காங்கிரஸ் ஆட்சி! மற்ற மாநிலங்களில்? கார்கே பேட்டி

துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட அனுமதி! உயர் நீதிமன்றம் உத்தரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


