ஆன்லைனில் பொருள்கள் வாங்குவதை எளிதாக்குகிறது ஜூடன் (Zoutons) குரோம் நீட்டிப்பு!
ஜூடன் என்பது கூப்பன்களைப் பற்றி கூறும் இணைய தள சேவை நிறுவனம். இதன்மூலம் எல்லா கடை மற்றும் நிறுவனங்களில் தரும் சிறந்த தள்ளுபடிகளை அறிய இயலும்.


தாங்கள் குரோம் பிரெளசர் பயன்படுத்துபவரா? தினமும் வாங்கும் பொருட்களில் பணம் மிச்சப்படுத்த நினைப்பவரா? ஆனால் சரியான கூப்பன்களும், ஒப்பந்தங்களும் கிடைக்காமல் திணறுபவரா? இப்பிரச்னைக்கான பதில் ஜூடன் (Zoutons) குரோம் நீட்டிப்பு என்ற ஒன்றுதான். ஜூடன் என்பது இணையதளத்தில் சிறந்த கூப்பன்களை சுலபமாகவும் எளிதாகவும் கண்டுபிடிக்க உதவுகின்றது. முன்பு இவர்கள் இணையதளம் மற்றும் ஆப் (app) மூலம் இதை செய்து வந்தனர். தற்பொழுது ஒரு குரோம் நீட்டிப்பை கொண்டுவந்துள்ளனர்.
குரோம் நீட்டிப்பு காரணமாக நம்மால் வேகமாக இணையதளத்தை உபயோகிக்க முடியும். ஜூடன் மூலம் 150-க்கும் மேற்பட்ட கடைகளின் கூப்பன்களை நம்மால் பெற முடியும். இதில் சிறந்தது எது என்பதை நம்மால் மட்டும் தனியாக கண்டுபிடிக்க முடியாது. இதற்குத்தான் நாம் ஜூடன் குரோம் நீட்டிப்பை உபயோகிக்க வேண்டும். இதன்மூலம் சிறந்த தள்ளுபடிகளை சுலபமாக கண்டுகொள்ளலாம்.
ஜூடன் பற்றி
ஜூடன் என்பது கூப்பன்களைப் பற்றி கூறும் இணைய தள சேவை நிறுவனம். இதன்மூலம் எல்லா கடை மற்றும் நிறுவனங்களில் தரும் சிறந்த தள்ளுபடிகளை அறிய இயலும். இதன்மூலம் உணவு ஆர்டர் செய்ய, டாக்ஸி புக் செய்ய, மொபைல் ரீசார்ஜ் செய்ய, பொருட்கள் வாங்க என அனைத்து செயல்களுக்கும் சிறந்த ஒப்பந்தம் பெறலாம். இச் சேவை 2013-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
குரோம் நீட்டிப்பு என்றால் என்ன?
நாம் அனைவரும் இணையதளம் பயன்படுத்த குரோம் பயன்படுத்துகின்றோம். குரோம் நீட்டிப்பு என்பது ஒரு மென்பொருள் நிரலாகும். தாம் இணையதளத்தை உபயோகிக்கும் விதத்துக்கு ஏற்ப இது செயல்படும். ஜூடன் குரோம் நீட்டிப்பை நாம் பதிவிறக்கம் செய்தவுடன், அதுவே சிறந்த தள்ளுபடிகளை நமக்கு காண்பிக்கும்.
இந்த குரோம் நீட்டிப்பின் காரணமே, நாம் நமக்கு தெரிந்ததை மட்டும் வாங்காமல் சிறந்ததை வாங்க வேண்டும் என்பதே. நம்மில் பல பேருக்கு இணயதளத்தில் குறைந்த விலையில் பொருட்கள் வாங்க தெரியாது. இச் சேவை மூலம் நாம் இதை சுலபமாக செய்யலாம். இதன் சிறப்பம்சமே இதன் அளவு மிகச் சிறியதாக வெறும் 477 கிலோபைட்ஸ் மட்டுமே.
குரோம் நீட்டிப்பின் வேலைப்பாடு
தாங்கள் இதை பயன்படுத்துவதனால் எவ்வித பாதிப்பும் வராது. இதை நீங்கள் பதிவிறக்கம் செய்துவிட்டு, வழக்கம் போல இணையதளத்தை பயன்படுத்தலாம். தாங்கள் ஏதேனும் ஒரு இணையதள அங்காடிக்கு சென்று பொருள் வாங்கினால், அதற்கு ஏற்ற கூப்பன்களை தானாகவே இது பயன்படுத்தும். இதன் மூலம் தங்களது நேரம், பணம் ஆகிய இரண்டையும் மிச்சப்படுத்தலாம்.
ஜூடன் குரோம் நீட்டிப்பை ஏன் உபயோகிக்க வேண்டும்?
தாம் இதை உபயோகிக்க வேண்டுமா வேண்டாமா என்பதை முடிவெடுப்பதற்கு முன்பு, ஜூடன் குரோம் நீட்டிப்பின் பயன்களை அறிந்துகொள்ளுங்கள்.
ஜூடன் குரோம் நீட்டிப்பு பெற வழி
இவை அனைத்தையும் செய்து முடிக்க சிறிது நேரமே தேவைப்படும். ஆகவே விரைவாக இன்றே ஜூடன் குரோம் நீட்டிப்பை சேர்த்து இணையதளத்தில் குதூகலமாக புதிய சலுகைகளுடன் பொருள்களை வாங்கி மகிழுங்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...