பி.கே. பிர்லா குழுமத்தைச் சேர்ந்த செஞ்சுரி டெக்டைல்ஸ் நிறுவனத்தின் சிமென்ட் உற்பத்திப் பிரிவை கையகப்படுத்த, அல்ட்ராடெக் சிமென்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதையடுத்து, சிமென்ட் உற்பத்தித் துறையில் ஆதித்ய பிர்லா குழுமத்தைச் சேர்ந்த அல்ட்ராடெக் சிமென்ட் நிறுவனத்தின் நிலை மேலும் வலுவடையும் என்று கூறப்படுகிறது.
இதுதொடர்பாக அல்ட்ராடெக் சிமென்ட் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு திங்கள்கிழமை கூடி விவாதித்தது. அந்தக் கூட்டத்தில், செஞ்சுரி டெக்ஸ்டைல்ஸின் சிமென்ட் உற்பத்திப் பிரிவை பங்குகள் பரிமாற்ற முறையின் கீழ் கையகப்படுத்த இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்தது. இந்தத் திட்டத்தின்படி, ரூ.10 முகமதிப்பு கொண்ட 8 செஞ்சுரி டெக்ஸ்டைல்ஸ் நிறுவனப் பங்குகளுக்குப் பதிலாக, அதே முகமதிப்பு கொண்ட தலா ஒரு அல்ட்ராடெக் சிமென்ட் நிறுவனப் பங்குகள் வழங்கப்படும்.
இந்த கையகப்படுத்தல், அல்ட்ராடெக் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு சாதகமாக இருக்கும் என்று அந்த நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

