அரசியல் மற்றும் பொருளாதார நிலவரங்களால் கடந்த வாரம் சரிவைக் கண்டு, தற்போது சுதாரித்து வரும் மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ், வியாழக்கிழமை கிடுகிடுவென 318 புள்ளிகள் அதிகரித்தது.
கடந்த ஏப்ரல் மாதம் 5-ஆம் தேதிக்குப் பிறகு சென்செக்ஸ் இவ்வளவு அதிக புள்ளிகள் அதிகரித்திருப்பது இதுவே முதல் முறையாகும். அந்த நாளில் சென்செக்ஸ் புள்ளிகள் 577 புள்ளிகள் அதிகரித்தது.
கர்நாடகத் தேர்தல் முடிவுகள் எதிரொலியாலும், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு குறைவு போன்ற பொருளாதார நிலவரங்களாலும் கடந்த வாரம் தொடர்ந்து 5 நாள்களாக பங்குச் சந்தையில் சரிவு ஏற்பட்டது.
இந்த நிலையில், உலகின் இருபெரும் பொருளாதார சக்திகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் போரைத் தவிர்ப்பதற்கான ஒப்பந்தம், அந்த இரு நாடுகளுக்கும் இடையே திங்கள்கிழமை கையெழுத்தானதைத் தொடர்ந்து சர்வதேச அளவில் ஏற்பட்ட உற்சாகம் பங்குச் சந்தையையும் தொற்றிக் கொண்டது.
இந்த நிலையில், வியாழக்கிழமை தொடங்கிய மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ், 34,377 புள்ளிகளில் தொடங்கி, அதிகப்பட்சமாக 34,751 புள்ளிகள் வரை சென்றது. இறுதியில் சென்செக்ஸ் 34,663 புள்ளிகளில் நிலைத்தது.
இதன் மூலம், மும்பை சென்செக்ஸ் வியாழக்கிழமை 318.2 புள்ளிகள் (0.93%) அதிகரித்தது.
தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 83.5 புள்ளிகள் (0.80%) அதிகரித்து 10,513.8 புள்ளிகளாக நிலைத்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இணைய மோசடிகள்: 2025-ம் ஆண்டில் ரூ. 11 லட்சம் கோடி இழப்பு!

மெஸ்ஸி புறக்கணிப்பு? ஒரு கோல், அசிஸ்ட்கூட செய்யாத ரோட்ரிக்கு தங்கப் பந்து விருது நியாயமா?

தில்லியில் போராடும் இளைஞர்களுக்காக ஆன்லைனில் உணவு ஆர்டர்! டெலிவரி ஊழியரின் விடியோ வைரல்







