பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

எஸ்பிஐ நிகர லாபம் ரூ.576 கோடி

இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் நிகர லாபம், கடந்த செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதியுடன் முடிவடையும் காலாண்டில் ரூ.576.46 கோடியாக

News image
Updated On :6 நவம்பர் 2018, 12:50 am IST


இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் நிகர லாபம், கடந்த செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதியுடன் முடிவடையும் காலாண்டில் ரூ.576.46 கோடியாக இருந்ததாக அந்த வங்கி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஜூலை 1-ஆம் தேதி செப்டம்பர் 30-ஆம் தேதியுடன் முடிவடையும் காலாண்டில், வங்கியின் நிகர லாபம் ரூ.576.46 கோடியாக உள்ளது.
கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில், வங்கியின் நிகர லாபம் ரூ.1,840.43 கோடியாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில், நடப்பு நிதியாண்டில் இது 69 சதவீத வீழ்ச்சியாகும்.
ஒட்டுமொத்த வருவாயைப் பொருத்தவரை, முந்தைய நிதியாண்டின் ஜூலை 1 முதல் செப்டம்பர் 30 வரையிலான காலாண்டில் வங்கி ரூ.74,948.51 கோடியை வருவாயாகப் பெற்றது.
நடப்பு நிதியாண்டின் இதே காலகட்டத்தில், அது ரூ.79,302.72 கோடியாக உயர்ந்துள்ளது.
அதிக அளவில் வாராக் கடன்களை தள்ளுபடி செய்த காரணத்தால், இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் வங்கி ரூ.4,875.85 கோடி நிகர நட்டத்தைச் சந்தித்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.