இந்தியப் பங்குச் சந்தைகளில் தொடர்ந்து ஆறு நாள்களாக மந்த நிலையில் இருந்த வர்த்தகம் வியாழக்கிழமை திடீர் உற்சாகம் கண்டது.
அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 72-ஆக சரிவடைந்த நிலையிலும், ஆரோக்கிய பராமரிப்பு, எரிசக்தி, மின்சார துறைகளைப் பங்குகளை வாங்குவதில் முதலீட்டாளர்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர்.
தொடர்ந்து ஆறு நாள்களாக முன்னணி நிறுவனப் பங்குகள் விலை குறைந்து வந்த சந்தர்ப்பத்தை முதலீட்டாளர்கள் சிறந்த வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டனர். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கின் விலை 2.80 சதவீதமும், பவர் கிரிட் 2.21 சதவீதமும், கோல் இந்தியா 2.05 சதவீதமும், ஸன் பார்மா பங்கின் விலை 2 சதவீதமும் உயர்ந்தன.
மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 224 புள்ளிகள் உயர்ந்து 38,242 புள்ளிகளில் நிலைத்தது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 59 புள்ளிகள் அதிகரித்து 11,536 புள்ளிகளில் நிலைத்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

31 ஆண்டுகளில் முதல் முறை... சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சியளித்த வங்கதேசம்!

சுரங்கப் பாதையின் இறுதியில் வெளிச்சத்தைக் கண்டேன்: கார்ல்சென்

ஹிமாசலில் நாளை(ஆக.17) அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை!

சர்க்கஸ் கும்பல் ஆட்சி! உதயநிதி ஸ்டாலின்! | DMK | TVK
விடியோக்கள்

சர்க்கஸ் கும்பல் ஆட்சி! உதயநிதி ஸ்டாலின்! | DMK | TVK



