ஐபோனுக்கு என்ன பெயர் வைத்தால் என்ன? ஆப்பிள் ஆப்பிள்தான்!
ஐபோன் எஸ்இ 2 இனி ஐபோன் 9 என்று அழைக்கப்படும்! ஜப்பானிய வலைத்தளமான மேக் ஒட்டகாரா அறிவிப்பு!


ஜப்பானிய வலைத்தளமான மேக் ஒட்டகாராவின் புதிய அறிக்கை என்னவென்றால். ஐபோன் எஸ்இ 2 இனி ஐபோன் 9 என அழைக்கப்படும் என்று கூறியுள்ளது.
சான் பிரான்சிஸ்கோ, டிசம்பர் 9 (ஐஏஎன்எஸ்): ஜப்பானிய வலைப்பதிவான மேக் ஒட்டகாராவின் புதிய அறிக்கையில், ஐபோன் எஸ்இ 2 இனி ஐபோன் 9 என அழைக்கப்படும் என்று கூறியுள்ளது, இது ஐபோன் 8 ஐப் போன்ற சேவைக் கொண்டிருக்கும் என்பதுதான் காரணம். இந்த சாதனம் 4.7 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் பெசல்களுடன் வேகமான ஏ 13 பயோனிக் சிப், 3 ஜிபி ரேம் உள்ளது. மேலும் 399 டாலருக்கு விற்பனையைத் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்பிள் ஆய்வாளரான மிங்-சி குவோ கூறுகையில், ஐபோன் எஸ்இ 2 ஜனவரி 2020 - ல் வெகுஜன உற்பத்திக்கு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது என்றும் மார்ச் இறுதியில் சந்தையில் கிடைக்கும் என்றும் கூறினார்.
ஐபோன் எஸ்இ 2 அதன் மதர்போர்டுக்கு 10-அடுக்கு அடி மூலக்கூறுடன் பிசிபி (எஸ்எல்பி) ஐப் பயன்படுத்தும். இது ஐபோன் 11-ம் பதிப்பில் பயன்படுத்தப்படும் அதே தொழில்நுட்பம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபோன் 11 தொடர் சாதனங்களில் பயன்படுத்தப்படுவதை விட எஸ்.எல்.பி குறைந்த விலையில் இருக்கும் என்றாலும், பெண்டிங் ஹோல்டிங்ஸ், ஜின்க்சிங் மற்றும் ஏடி அண்ட் எஸ் உள்ளிட்ட பல ஐபோன் சப்ளையர்களுக்கு இது பயனளிக்கும். ஐபோன் எஸ்இ 2 க்கு 3D டச் அம்சம் இருக்காது, நிறுவனத்தால் ஐபோன் 11 இலிருந்தும் அகற்றப்பட்டது. மேலும், இதில் ஃபேஸ் ஐடி கிடையாது. கைவிரல் ரேகை அதாவது டச் ஐடி மட்டுமே உண்டு.
இந்த தொலைபேசியில் மூன்று நிறங்களில் கிடைக்கும். சாம்பல் நிறம், சிவப்பு மற்றும் வெள்ளி நிறத்தில் கிடைக்கும். 2020 ஆம் ஆண்டு முதல் பாதியில் ஆப்பிள் புதிய ஐபாட் புரோ, புதிய மேக்புக் மற்றும் ஆக்மெண்டட் ரியாலிட்டி தொழில்நுட்பத்துடன் கூடிய (ஏஆர்) ஹெட்செட்டை வெளியிட தயாராகி வருவதாக மிங்-சி குவோ கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...