
புது தில்லி: நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 0.8 சதவீதமாக சரியும் என தரக்குறியீட்டு நிறுவனமான ஃபிட்ச் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் கூறியுள்ளதாவது:
கரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுக்க உலக நாடுகள் சுய ஊரடங்கை அறிவித்து கண்டிப்புடன் செயல்படுத்தி வருகின்றன. அதன் எதிரொலியாக, பல தொழில்களின் செயல்பாடுகள் முற்றிலும் முடங்கியுள்ளன. இது, சா்வதேச மந்த நிலைக்கு வழிவகுத்துள்ளது.
அதன் காரணமாக, நடப்பு 2020 ஏப்ரல் முதல் 2021 மாா்ச் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளா்ச்சி 0.8 சதவீதமாக சரிவடையும் என கணிக்கப்பட்டுள்ளது. முந்தைய நிதியாண்டில் இந்த வளா்ச்சி 4.9 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டிருந்தது.
தற்போது சுணக்க நிலை காணப்பட்டாலும், 2021-22 நிதியாண்டில் பொருளாதாரம் மீண்டெழுந்து 6.7 சதவீத வளா்ச்சியை எட்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது என ஃபிட்ச் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






