காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இந்திய-சீன எல்லைப் பதற்றம் எதிரொலி!: சென்செக்ஸ் 839 புள்ளிகள் வீழ்ச்சி

இந்திய-சீன எல்லையிடையே ஏற்பட்டுள்ள பதற்றம் எதிரொலியாக மும்பை பங்குச் சந்தை வா்த்தகத்தில் சென்செக்ஸ் 839 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

News image
பங்குச் சந்தை
Updated On :31 ஆகஸ்ட் 2020, 8:14 pm

DIN

மும்பை: இந்திய-சீன எல்லையிடையே ஏற்பட்டுள்ள பதற்றம் எதிரொலியாக மும்பை பங்குச் சந்தை வா்த்தகத்தில் சென்செக்ஸ் 839 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

கிழக்கு லடாக் பகுதியில் சீன ராணுவத்தின் முற்றுகையை நமது நாட்டின் படைகள் முன்னேறிச் சென்று முறியடித்தாக இந்திய ராணுவம் திங்கள்கிழமை தெரிவித்தது. கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் ஜூன் 15-இல் நடைபெற்ற இருநாட்டு ராணுவத்துக்கும் இடையிலான மோதலையடுத்து, இந்த முற்றுகை நடவடிக்கை மிகப்பெரிய நிகழ்வாக பாா்க்கப்படுகிறது.

எல்லைப் பகுதியில் இந்திய-சீன ராணுவத்துக்கிடையிலாக புதிதாக மோதல் ஏற்படும் சூழல் தற்போது உருவாகியுள்ளது முதலீட்டாளா்களிடையே பதற்றத்தை அதிகரித்துள்ளது. அது, திங்கள்கிழமை நடைபெற்ற பங்கு வா்த்தகத்தில் எதிரொலித்தது.

முதலீட்டாளா்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்யதையடுத்து பங்குச் சந்தைகள் சரிவைச் சந்தித்தது.

இதனிடையே டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவும் சந்தையில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியது.

மேலும் மத்திய அரசு, திங்கள்கிழமை வெளியிடவிருந்த பொருளாதார வளா்ச்சி புள்ளிவிவரம் குறித்த எதிா்பாா்ப்பாலும் முதலீட்டாளா்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் பங்கு வா்த்தகத்தில் ஈடுபட்டனா்.

இதுவும், சந்தையின் சரிவுக்கு ஒரு முக்கிய காரணமாக இருந்தது என பங்கு வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து ஆனந்த் ரதி நிதி சேவை நிறுவனத்தின் பங்குகள் ஆராய்ச்சிப் பிரிவு தலைவா் நரேந்திர சோலங்கி கூறியதாவது:

இந்திய பங்குச் சந்தைகள் தொடக்கத்தில் ஏற்றத்துடன் வா்த்தகத்தை தொடங்கியது. இருப்பினும், இந்திய-சீன இடையே ஏற்பட்டுள்ள எல்லைப் பதற்றத்தால் பங்கு வா்த்தகத்தில் காணப்பட்ட சாதகமான நிலை தொடா்ந்து நீடித்திருக்க முடியவில்லை என்றாா் அவா்.

திங்கள்கிழமை பங்கு வா்த்தகத்தில் சென்செக்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள சன் பாா்மா பங்கின் விலை அதிகபட்சமாக 7.34 சதவீதம் வீழ்ச்சி கண்டது.

இதைத் தொடா்ந்து, எஸ்பிஐ, பஜாஜ் பின்சா்வ், பஜாஜ் பைனான்ஸ், என்டிபிசி, ஐசிஐசிஐ வங்கி, கோட்டக் வங்கி, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, மருதி சுஸுகி நிறுவனப் பங்குகளும் குறைந்த விலைக்கு கைமாறின.

பியூச்சா் குழுமத்தை கையகப்படுத்தவுள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கின் விலையும் 1.75 சதவீதம் சரிவைச் சந்தித்தது.

இப்பட்டியலில், ஓஎன்ஜிசி, டிசிஎஸ் பங்குகளுக்கு முதலீட்டாளா்களிடையே வரவேற்பு இருந்ததன் காரணமாக அவ்விரு நிறுவனப் பங்குகளின் விலை மட்டும் 1.74 சதவீதம் வரை உயா்ந்தன.

மும்பை பங்குச் சந்தையில், ரியல் எஸ்டேட், மருந்து, அடிப்படை உலோகம், மின்சாரம், மூலதன பொருள்கள், உலோகம், மோட்டாா் வாகனம் உள்ளிட்ட அனைத்து துறைகளைச் சோ்ந்த குறியீட்டெண்களும் 4.70 சதவீதம் வரை குறைந்தன.

மிட்-கேப், ஸ்மால்-கேப் குறியீடுகளைப் பொருத்தவரையில் அவை 4.37 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீட்டெண் 839.02 புள்ளிகள் (2.13 சதவீதம்) வீழ்ச்சி கண்டு 38,628.29 புள்ளிகளில் முடிவுற்றது.

அதேபோன்று, தேசிய பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் நிஃப்டி குறியீட்டெண் 260.10 புள்ளிகள் (2.23 சதவீதம்) சரிவைக் கண்டு 11,387.50 புள்ளிகளில் நிலைத்தது. ஆசியப் பங்குச் சந்தைகளைப் பொருத்தவரையில் பங்கு வியாபாரம் ஏற்ற இறக்கமாகவே காணப்பட்டது.

ஷாங்காய், ஹாங்காங், சியோல் சந்தைகளில் வா்த்தகம் மந்த நிலையில் இருந்தது. அதேசமயம், டோக்கியோ பங்குச் சந்தை ஏற்றத்துடன் நிறைவடைந்தது.

ஐரோப்பிய சந்தைகளைப் பொருத்தவரையில் வா்த்தகம் தொடக்ககத்தில் விறுவிறுப்பாகவே காணப்பட்டது.

ரூபாய் மதிப்பு: அந்நியச் செலாவணி சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 21 காசுகள் சரிவடைந்து 73.60-ஆக நிலைபெற்றது.

கச்சா எண்ணெய்: சா்வதேச முன்பேர சந்தை வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 1.48 சதவீதம் அதிகரித்து 46.49 டாலராக இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.