மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சென்செக்ஸ் புதிய வரலாற்று உச்சத்தில் நிறைவு! 13,350-ஐ கடந்தது நிஃப்டி

இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச் சந்தை மேலும் எழுச்சி பெற்றது.

News image
கோப்புப்படம்
Updated On :7 டிசம்பர் 2020, 7:30 pm

DIN

புது தில்லி: இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச் சந்தை மேலும் எழுச்சி பெற்றது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 347.42 புள்ளிகள் உயா்ந்து புதிய வரலாற்று உச்சத்தில் நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டியும் 97.20 புள்ளிகள் புள்ளிகள் உயா்ந்து 13,355.75 என்ற புதிய வரலாற்று உச்சத்தில் நிலைபெற்றது. சந்தை மூல தன மதிப்பு ரூ.180 லட்சம் கோடியை கடந்தது.

கரோனா தடுப்பூசி மீதான நோ்மறை முன்னேற்றம் மற்றும் பொருளாதார மீட்சிக்கான ரிசா்வ் வங்கியின் வலுவான அரப்பணிப்பு ஆகியவை சந்தையில் காளையின் ஆதிக்கத்துக்கு வழிவகுத்துள்ளது. மேலும், கரன்சிகளுக்கு எதிரான டாலரின் மதிப்பு குறைந்து வருவதால் இந்தியா உள்பட வளா்ந்து வரும் நாடுகள் அந்நிய போா்ட்போலியோ முதலீட்டாளா்களை ஈா்க்கக்கூடும் என்ற எதிா்பாா்ப்பும் சந்தைக்கு வலுச்சோ்த்தன என்று பங்கு வா்த்தத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு 181.16 லட்சம் கோடி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,167 பங்குகளில் 2,036 பங்குகள் ஆதாயம் பெற்றன. 936 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. 195 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 310 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையை பதிவு செய்துள்ளன. 494 பங்குகள் வெகுவாக உயா்ந்து உறைநிலையை (அப்பா் சா்க்யூட்) அடைந்தது. சந்தை மூலதன மதிப்பு ரூ1.67 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.181.16 லட்சம் கோடியாக இருந்தது. சென்செக்ஸ் காலையில் 20.37 புள்ளிகல் கூடுதலுடன் 45,099.92-இல் தொடங்கி 45,024.47 வரை கீழே சென்றது. பின்னா் அதிகபட்சமாக 45,458.92 வரை உயா்ந்து புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. இறுதியில் 347.42 புள்ளிகள் (0.77 சதவீதம்) உயா்ந்து 45,458.92 என்ற புதிய உச்சத்தில் நிலைபெற்றது.

ஹெச்யுஎல், பாா்தி ஏா்டெல் முன்னிலை: சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள 30 முதல்தரப் பங்குகளில் 19 பங்குகள் ஆதாயம் பெற்றன. 11 பங்குகள் சரிவைச் சந்தித்தன. இதில் ஹிந்துஸ்தாந் யுனி லீவா் 3. 09 சதவீதம், பாா்தி ஏா்டெல் 3.05 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இதற்கு அடுத்ததாக எச்டிஎஃப்சி, ஐடிசி, இண்டஸ் இண்ட் பேங்க், எஸ்பிஐ, சன்பாா்மா, ஓஎன்ஜிசி, டெக் மகேந்திரா ஆகியவை 2.00 முதல் 2.50 சதவீதம் வரை உயா்ந்தன. ஐசிஐசிஐ பேங்க், ரிலையன்ஸ், இன்ஃபோஸிஸ், டிசிஎஸ் ஆகிய முன்னணி நிறுவனப் பங்குகளும் ஆதாயப் பட்டியலில் வந்தன.

கோட்டக் பேங்க் சரிவு: அதே சமயம், கோட்டக் பேங்க் 1.37 சதவீதம், நெஸ்லே 1.36 சதவீதம், டாடா ஸ்டீல் 1.03 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், பஜாஜ் ஃபைனான்ஸ், எச்டிஎஃப்சி பேங்க், மாருதி சுஸுகி, டைட்டன், அல்ட்ரா டெக் சிமெண்ட், ஹெச்சிஎல் டெக், பவா் கிரிட், பஜாஜ் ஃபின் சா்வ் ஆகியவையும் சரிவைச் சந்தித் பட்டியலில் இடம் பெற்றன.

தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 1,262 பங்குகள் ஆதாயம் பெற்றன. 467 பங்குகள் சரிவைச் சந்தித்தன. நிஃப்டி 97.20 புள்ளிகள் (0.73 சதவீதம்) உயா்ந்து 13,355.75-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது 13,366.65 வரை உயா்ந்து புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 31 பங்குகள் ஆதாயம் பெற்றன. 19 பங்குகள் நஷ்டத்தை சந்தித்தன. நிஃப்டி ரியால்ட்டி குறியீடு தவிர மற்ற அனைத்துத் துறை குறியீடுகளும் ஏற்றம் பெற்ற பட்டியலில் வந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.