பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

உயர்வுடன் நிறைவடைந்த வணிகம்: உச்சத்தில் சென்செக்ஸ்

பங்குச்சந்தையின் இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வுடன் முடிவடைந்துள்ளன. சென்செக்ஸ் 46 ஆயிரம் புள்ளிகளைக் கடந்து புதிய உச்சத்தை அடைந்துள்ளது.

News image
உயர்வுடன் நிறைவடைந்த வணிகம்: புதிய உச்சத்தில் சென்செக்ஸ் (கோப்புக்காட்சி)
Updated On :9 டிசம்பர் 2020, 11:02 am

DIN

பங்குச்சந்தையின் இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வுடன் முடிவடைந்துள்ளன. சென்செக்ஸ் 46 ஆயிரம் புள்ளிகளைக் கடந்து புதிய உச்சத்தை அடைந்துள்ளது.

இந்த வாரத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக உயர்வுடன் தொடங்கி உயர்வுடன் முடிவடைந்து வரும் பங்குச்சந்தை வர்த்தகம் இன்றும் உயர்வுடன் முடிவடைந்துள்ளது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 494.99 புள்ளிகள் உயர்ந்து 46,103.5 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவுபெற்றுள்ளது. மொத்த வர்த்தகத்தில் இது 1.09 சதவிகிதம் உயர்வாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 136.15 புள்ளிகள் உயர்ந்து 13,529.10 புள்ளிகளாக வர்த்தகம் முடிவடைந்துள்ளது. மொத்த வர்த்தகத்தில் இது 1.02 சதவிகிதம் உயர்வாகும்.

பங்குச்சந்தையில் அதிகபட்சமாக ஏஸியன் பெயின்ட்ஸ் நிறுவனத்தின் பங்கு ஏற்றம் கண்டுள்ளன. ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவனத்தில் 3.37 சதவிகித பங்குகள் உயர்ந்துள்ளன.

அதற்கு அடுத்தபடியாக கோட்டாக் வங்கி 2.67 சதவிகிதமும், ஆக்சிஸ் வங்கி 2.19 சதவிகிதமும், எச்.டி.எஃப்.சி. வங்கிகளின் பங்குகள் 2.15 சதவிகிதம் உயர்ந்துள்ளன.

சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 20 நிறுவனங்களின் பங்குகள் ஏற்றமடைந்துள்ளன.

டாடா ஸ்டீல், மாருதி சுசூகி, பஜாஜ் ஆட்டோ ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.