பங்குச்சந்தை வணிகம் சரிவுடன் தொடக்கம்
பங்குச்சந்தை வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று காலை சரிவுடன் தொடங்கியது.


பங்குச்சந்தை வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று காலை சரிவுடன் தொடங்கியது.
கடந்த மூன்று நாள்களாக உயர்வுடன் தொடங்கிய வணிகம் இன்று சரிவுடன் தொடங்கியுள்ளது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 267.19 புள்ளிகள் சரிந்து 45,843.81 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. மொத்த வர்த்தகத்தில் இது 0.56 சதவிகிதம் சரிவாகும்.
இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 50 புள்ளிகள் சரிந்து 13,500 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. மொத்த வர்த்தகத்தில் இது 0.42 சதவிகிதம் சரிவாகும்.
நேற்று உயர்வுடன் காணப்பட்ட அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனத்தின் பங்குகள் 2 சதவிகிதமும், டாடா ஸ்டீல், இன்ஃபோசிஸ், டெக் மஹிந்திரா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் தலா ஒரு சதவிகிதமும் சரிந்தது.
நெஸ்ட்லே இந்தியா 1.70 சதவிகிதமும், மாருதி சுஸுகி 0.99 சதவிகிதமும், டைட்டன் நிறுவனத்தின் பங்குகள் 0.64 சதவிகிதமும் உயர்ந்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...