கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பங்குச்சந்தை வணிகம் உயர்வுடன் தொடக்கம்

பங்குச்சந்தை வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று காலை உயர்வுடன் தொடங்கியது.

News image

பங்குச்சந்தை வணிகம் உயர்வுடன் தொடக்கம் (கோப்புப்படம்)

Updated On :11 டிசம்பர் 2020, 5:24 am

பங்குச்சந்தை வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று காலை உயர்வுடன் தொடங்கியது.

இந்த வாரத்தின் தொடக்கத்திலிருந்து தொடர்ந்து மூன்று நாள்களாக உயர்வுடன் தொடங்கி உயர்வுடன் முடிவடைந்த வர்த்தகம், நேற்று சரிவுடன் தொடங்கி சரிவுடன் முடிவடைந்தது. இந்நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) வர்த்தகம் உயர்வுடன் தொடங்கியுள்ளது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 273.84 புள்ளிகள் உயர்ந்து 46,227.11 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. மொத்த வர்த்தகத்தில் இது 0.59 சதவிகிதம் உயர்வாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 75.05 புள்ளிகள் உயர்ந்து 13,558.35 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. மொத்த வர்த்தகத்தில் இது 0.59 சதவிகிதம் உயர்வாகும்.

பங்குச்சந்தையில் ரிலையன்ஸ், எச்.டி.எஃப்.சி., ஐசிஐசிஐ வங்கி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.

அதிகபட்சமாக ஒ.என்.ஜி.சி நிறுவனத்தின் பங்குகள் 9.72 சதவிகிதம் உயர்ந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக என்.டி.பி.சி. 4.47 சதவிகிதமும், டாடா ஸ்டீல் 1.78 சதவிகிதமும் உயர்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.