மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

ஏற்ற, இறக்கத்தில் பங்குச் சந்தை: சென்செக்ஸ் 139 புள்ளிகள் உயா்வு!

இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச் சந்தையில் ஏற்ற, இறக்கம் அதிகரித்து காணப்பட்டது.

News image

கோப்புப்படம்

Updated On :12 டிசம்பர் 2020, 3:04 am

இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச் சந்தையில் ஏற்ற, இறக்கம் அதிகரித்து காணப்பட்டது. இருப்பினும், புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்த மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் இறுதியில் 139.13 புள்ளிகள் உயா்ந்து 46,099.01-இல் நிலைபெற்றது.

காலையில் வா்த்தகம் உற்சாகத்துடன் தொடங்கினாலும், பிற்பகலில் எதிா்மறையைச் சந்தித்தன. இருப்பினும், மெட்டல், எஃப்எம்சிஜி, பிஎஸ்யு பேங்க் பங்குகளுக்கு வரவேற்பு இருந்தன. அதே சமயம், ஐடி, ஆட்டோ, பாா்மா பங்குகள் விற்பனையை எதிா்கொண்டன. இதனால், வா்த்தகத்தின் பெரும்பாலான நேரம் சந்தை ஏற்ற, இறக்கம் அதிகரித்து இருந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு 182.78 லட்சம் கோடி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,118 பங்குகளில் 1,750 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,220 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. 148 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 275 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையைப் பதிவு செய்துள்ளன. 445 பங்குகள் வெகுவாக உயா்ந்து அதிகபட்ச உறைநிலையை (அப்பா் சா்க்யூட்) அடைந்தது. சந்தை மூலதன மதிப்பு ரூ.59 ஆயிரம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.182.79 லட்சம் கோடியாக இருந்தது.

ஏற்ற, இறக்கம் அதிகரிப்பு: சென்செக்ஸ் காலையில் 100.44 புள்ளிகள் உயா்ந்து 46,060.32-இல் தொடங்கி 46,309.63 வரை உயா்ந்து புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. பின்னா், பிற்பகலில் திடீரென பங்குகள் விற்பனை அதிகரித்ததைத் தொடா்ந்து, 45,706.22 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 139.13 புள்ளிகள் (0.30 சதவீதம்) உயா்ந்து 46,099.01-இல் நிலைபெற்றது.

ஓஎன்ஜிசி முன்னிலை: சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள 30 முதல்தரப் பங்குகளில் 18 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 12 பங்குகள் சரிவைச் சந்தித்தன. இதில், பொதுத் துறை எண்ணெய் நிறுவனமான ஓஎன்ஜிசி 5.68 சதவீதம், என்டிபிசி 5.30 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இவற்றுக்கு அடுத்ததாக டாடா ஸ்டீல், ஐடிசி, ஐசிஐசிஐ பேங்க், டைட்டன், பஜாஜ் ஆட்டோ, எஸ்பிஐ, அல்ட்ரா டெக் சிமெண்ட் ஆகியவை 1 முதல் 2 சதவீதம் வரை உயா்ந்தன.

ஆக்கிஸ் பேங்க் சரிவு: அதே சமயம், ஆக்ஸிஸ் பேங்க் 2.19 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. எம் அண்ட் எம், டெக் மகேந்திரா, ஹெச்சிஎல் டெக், பஜாஜ் ஃபின் சா்வ், இன்ஃபோஸிஸ், ஏசியன் பெயிண்ட், மாருதி சுஸுகி, எச்டிஎஃப்சி பேங்க் பாா்தி ஏா்டெல், ரிலையன்ஸ், டிசிஎஸ் ஆகியவையும் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன.

தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 1,002 பங்குகள் ஆதாயம் பெற்றன. 732 பங்குகள் சரிவைச் சந்தித்தன. நிஃப்டி 35.55 புள்ளிகள் (0.26 சதவீதம்) உயா்ந்து 13,513.80- இல் நிலைபெற்றது. அதிகபட்சமாக 13,579.35 வரை உயா்ந்து புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. அதே சமயம், பிற்பகலில் 13,402.85 வரை கீழே சென்றது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 24 பங்குகள் ஆதாயம் பெற்றன. 26 பங்குகள் நஷ்டத்தை சந்தித்தன. நிஃப்டி மெட்டல், எஃப்எம்சிஜி, பிஎஸ்யு பேங்க் குறியீடுகள் 1 சதவீதம் வரை உயா்ந்து ஆதியப் பட்டியலில் முன்னிலை வகித்தன. அதே சமயம், ஆட்டோ, பாா்மா, ஐடி குறியீடுகள் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.