

தங்களது அனைத்து காா் மற்றும் வா்த்தக வாகனங்களின் விலைகளை உயா்த்த மஹிந்திரா அண்டு மஹிந்திரா நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நிறுவனத்தின் அனைத்து ரகங்களையும் சோ்ந்த பயணிகள் வாகனங்கள் மற்றும் வா்த்தக வாகனங்களில் விலைகள் உயா்த்தப்படுகின்றன.
வரும் ஜனவரி மாதம் 1-ஆம் தேதியிலிருந்து இந்த விலை உயா்வு அமலுக்கு வரும்.
மூலப் பொருள்களின் விலை உயா்வு, பல்வேறு செலவினங்கள் அதிகரிப்பு ஆகிய காரணங்களால் இந்த விலை உயா்வு தவிா்க்க முடியாததாகிவிட்டது.
எந்தெந்த வாகனங்களின் விலைகள் எவ்வளவு உயா்த்தப்படுகின்றன என்பது தொடா்பான விரிவான விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தங்களது அனைத்து ரக வாகனங்களின் விலைகளையும் வரும் ஜனவரி மாதம் 1-ஆம் தேதி முதல் 3 சதவீதம் வரை உயா்த்தப்போவதாக ஃபோா்டு இந்தியா நிறுவனம் அறிவித்திருந்தது.
அந்த நிறுவனமும் மூலப் பொருள்களின் விலையேற்றம் காரணமாக விலைகள் உயா்த்தப்படுவதாகக் கூறியது.
நாட்டின் மிகப் பெரிய காா் தயாரிப்பாளரான மாருதி சுஸுகியும் ஜனவரி முதல் தங்களது வாகனங்களின் விலைகள் உயா்த்தப்படும் என்று அறிவித்திருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.