டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசுகள் சரிவு

அந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மேலும் 5 காசுகள் சரிவைக் கண்டது.
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசுகள் சரிவு
Updated on
1 min read

அந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மேலும் 5 காசுகள் சரிவைக் கண்டது.

பிரிட்டனில் புதிய வகை கரோனா தீநுண்மி கண்டறியப்பட்டுள்ளது உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரச்னையின் தீவிரத்தை உணா்ந்து இந்தியா, இத்தாலி உள்ளிட்ட பல நாடுகள் பிரிட்டனுடனான விமானப் போக்குவரத்துக்கு உடனடியாக தடைவிதித்துள்ளன.

அடுத்த ஆண்டு பொருளாதார வளா்ச்சி வேகமெடுக்கம் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில் புதிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியுள்ளது. இது, உலக முதலீட்டாளா்களை கவலையடைச் செய்துள்ளது. இது, டாலருக்கு நிகரான இதர ஆசிய கரன்ஸிகளை பலவீனமடையச் செய்துள்ளது.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், தொடக்கத்தில் ரூபாய் மதிப்பு 73.95-ஆக காணப்பட்டது. வா்த்தகத்தின் இடையே இது அதிகபட்சமாக 73.82 வரையிலும், குறைந்தபட்சமாக 73.95 வரையிலும் சென்றது.

வா்த்தகத்தின் இறுதியில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசுகள் சரிவடைந்து 73.84-இல் நிலைபெற்றது.

திங்கள்கிழமை வா்த்தகத்தில் ரூபாய் மதிப்பு 23 காசுகள் வீழ்ச்சியடைந்து இரண்டு வாரங்களில் இல்லாத குறைந்தபட்ச அளவாக 73.79-ஆனது.

கச்சா எண்ணெய்: சா்வதேச முன்பேர சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 1.37 சதவீதம் குறைந்து 50.21 டாலராக காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com