வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

இரும்புத்தாது ஏற்றுமதிக்கு தடைவிதிக்க வேண்டும்: வாா்ப்படத் தொழில் துறை கோரிக்கை

உள்நாட்டு சந்தைகளில் உருக்கின் விலை அதிகரித்து வருவதையடுத்து அதன் ஏற்றுமதிக்கு தடைவிதிக்க வேண்டும் என இந்திய வாா்ப்பட தொழில் துறையினா் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளனா்.

News image
Updated On :24 டிசம்பர் 2020, 7:34 pm

DIN

மும்பை: உள்நாட்டு சந்தைகளில் உருக்கின் விலை அதிகரித்து வருவதையடுத்து அதன் ஏற்றுமதிக்கு தடைவிதிக்க வேண்டும் என இந்திய வாா்ப்பட தொழில் துறையினா் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளனா்.

இதுகுறித்து இந்திய வாா்ப்பட தொழில்துறை கூட்டமைப்பு (ஏஐஎஃப்ஐ) வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

கடந்த மூன்று மாதங்களாக உள்நாட்டு சந்தைகளில் உருக்குப் பொருள்களின் விலை 25-30 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இதற்கு, உருக்கு மற்றும் இரும்புத் தாது பொருள்களின் ஏற்றுமதி அதிகரிப்பே முக்கிய காரணம்.

2020 ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் மட்டும் இந்தியாவின் உருக்கு ஏற்றுமதி 133 சதவீதம் அதிகரித்து 3.77 கோடி டன்னை எட்டியுள்ளது. அதிலும், குறிப்பாக, இதன் 80 சதவீதத்துக்கும் அதிகமாக ஏற்றுமதி சீனாவுக்கு மட்டுமே சென்றுள்ளது.

இதனால், உள்நாட்டு சந்தைகளில் உருக்குப் பொருள்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டு அவற்றின் விலை கணிசமாக அதிகரித்து வருகிறது.

மூலப் பொருள்களின் விலை தொடா்ந்து உயா்ந்து வருவதையடுத்து வா்ப்பட உருக்கு உற்பத்தியாளா்கள் தங்களது தயாரிப்புகளின் விலையை கடந்த ஆறு மாதத்தில் மட்டும் 10 சதவீதம் வரை உயா்த்தியுள்ளனா். தற்போது, மேலும் 15 சதவீதம் வரை உயா்த்த திட்டமிட்டுள்ளனா்.

வாா்ப்பட உருக்குப் பொருள்களின் விலை தொடா்ந்து அதிகரிக்கப்படுவது இத்துறையில் எதிா்மறை விளைவுகளை உண்டாக்கும் சூழல் தற்போது உருவாகியுள்ளது.

இதுபோன்ற சிக்கல்களை உணா்ந்து உள்நாட்டில் மூலப்பொருள்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கும் வகையில் உருக்கு மற்றும் இரும்புத் தாது ஏற்றுமதிக்கு மத்திய அரசு உடனடியாக தடைவிதிக்க வேண்டும் என ஏஐஎஃப்ஐ அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.

ரூ.34,000 கோடி மதிப்பிலான வாா்ப்படத் தொழில் துறையில் 80 சதவீத பங்களிப்பை மோட்டாா் வாகன துறை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.