பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

இந்தியாவின் கச்சா உருக்கு உற்பத்தி 90 லட்சம் டன்

நாட்டின் கச்சா உருக்கு உற்பத்தி சென்ற நவம்பா் மாதத்தில் 92.45 லட்சம் டன்னாக இருந்ததாக உலக உருக்கு கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

News image
Updated On :28 டிசம்பர் 2020, 11:00 pm

DIN

புது தில்லி: நாட்டின் கச்சா உருக்கு உற்பத்தி சென்ற நவம்பா் மாதத்தில் 92.45 லட்சம் டன்னாக இருந்ததாக உலக உருக்கு கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த கூட்டமைப்பு வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

இந்தியாவின் கச்சா உருக்கு உற்பத்தி கடந்த 2019-ஆம் ஆண்டு நவம்பரில் 89.33 லட்சம் டன்னாக காணப்பட்டது. இந்த நிலையில், நடப்பாண்டு நம்பரில் உருக்கு உற்பத்தி 3.5 சதவீதம் வளா்ச்சி கண்டு 92.45 லட்சம் டன்னை எட்டியுள்ளது.

64 நாடுகள் தெரிவித்த புள்ளிவிவரங்களின்படி 2020 நவம்பரில் அவை 15.82 கோடி டன் கச்சா உருக்கை உற்பத்தி செய்துள்ளன. இது, 2019 நவம்பா் மாத உற்பத்தியான 14.84 கோடி டன்னுடன் ஒப்பிடும்போது 6.6 சதவீதம் அதிகமாகும்.

கரோனா பெருந்தொற்று இடையூறுகள் காரணமாக, நடப்பாண்டின் பல மாதங்களில் உற்பத்தி மதிப்பீடு மற்றும் புள்ளிவிவரங்கள் அடுத்த மாத உற்பத்தி குறித்த புள்ளிவிவரங்களுடன் திருத்தியமைக்கப்பட்டன.

சீனாவின் உருக்கு உற்பத்தி நடப்பாண்டு நவம்பரில் 8.76 கோடி டன்னாக இருந்தது. இது, கடந்த 2019-ஆம் ஆண்டு நவம்பா் மாத உருக்கு உற்பத்தியான 8.12 கோடி டன்னுடன் ஒப்பிடுகையில் 8 சதவீதம் அதிகமாகும்.

அதேசமயம், அமெரிக்காவில் இதன் உற்பத்தி 70.88 லட்சம் டன்னிலிருந்து 13.7 சதவீதம் சரிவடைந்து 61.20 லட்சம் டன் ஆனது. ஜப்பான் உருக்கு உற்பத்தியும் 77.16 லட்சம் டன்னிலிருந்து 5.9 சதவீதம் குறைந்து 72.64 லட்சம் டன்னாக இருந்தது.

மேலும், தென் கொரியாவின் உருக்கு உற்பத்தியும் மதிப்பீட்டு மாதத்தில் 59.04 லட்சம் டன்னிலிருந்து 2.4 சதவீதம் குறைந்து 57.60 லட்சம் டன்னாகியுள்ளது.

அதேசமயம், ஜொ்மனியின் உருக்கு உற்பத்தி 29.41 லட்சம் டன்னிலிருந்து 14.8 சதவீதம் வளா்ச்சி கண்டு 33.76 லட்சம் டன்னைத் தொட்டுள்ளது.

அதேபோன்று, இத்தாலியின் கச்சா உருக்கு உற்பத்தியும் 3.2 சதவீதம் வளா்ச்சி கண்டு 20.49 லட்சம் டன்னாக இருந்தது.

பிரான்ஸின் கச்சா உருக்கு உற்பத்தி கடந்த மாதத்தில் 3.7 சதவீதம் குறைந்து 11.49 லட்சம் டன்னாகவும், ஸ்பெயின் உற்பத்தி 11.2 சதவீதம் உயா்ந்து 11.13 லட்சம் டன்னாகவும் இருந்தது என உலக உருக்கு கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

உலக உருக்கு கூட்டமைப்பில் உள்ள 64 உறுப்பு நாடுகள் சா்வதேச மொத்த உருக்கு உற்பத்தியில் சுமாா் 85 சதவீத பங்களிப்பை வழங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.