ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

இருப்பிடத்தை அறியும் மென்பொருளை நீக்க ஆப்பிள், கூகுள் நடவடிக்கை

பிரபல தொழில்நுட்ப நிறுவனங்களான ஆப்பில் மற்றும் கூகுள் ஆகியவை தங்களது பயன்பாடுகளிலிருந்து, இருப்பிடத்தை அறிய உதவும் எக்ஸ்-மோட் சோஷியல் மென்பொருளை நீக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.

News image
இருப்பிடத்தை அறியும் மென்பொருளை நீக்க ஆப்பிள், கூகுள் நடவடிக்கை
Updated On :30 டிசம்பர் 2020, 1:01 pm

DIN

பிரபல தொழில்நுட்ப நிறுவனங்களான ஆப்பில் மற்றும் கூகுள் ஆகியவை தங்களது பயன்பாடுகளிலிருந்து, இருப்பிடத்தை அறிய உதவும் எக்ஸ்-மோட் சோஷியல் மென்பொருளை நீக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.

தொழில்நுட்ப நிறுவனங்களான ஆப்பிள் மற்றும் கூகுள் ஆகியவை தொழில்நுட்ப சேவைகளை தங்களது பயன்பாடுகளின் மூலம் பயனர்களுக்கு வழங்கி வருகின்றன. மேலும் பயனர்களுக்கு தொழில்நுட்ப வசதிகளை வழங்குவதற்காக பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டும் வருகின்றன.

இந்நிலையில் தங்கள் இயக்க முறைமைகளின் கீழ் இயக்கும் ஸ்மார்ட்போன்களிலிருந்து இருப்பிடத் தரவுகளை சேகரிக்கும் எக்ஸ்-மோட் மென்பொருளை நீக்க நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தங்களது ஸ்மார்ட்போன்களிலிருந்து சேகரிக்கப்படும் இருப்பிடத் தரவுகளை அரசுக்கு விற்பனை செய்வதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எக்ஸ்-மோட் மென்பொருள் தொழில்நுட்பம் 400 க்கும் மேற்பட்ட ஆப்களில் பயன்படுத்தப்படுகிறது. ஆப்பிள் தங்கள் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு தங்கள் நிறுவன பயன்பாடுகளிலிருந்து எக்ஸ்-மோட் மென்பொருளை கால அவகாசம் வழங்கியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.