ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

சென்செக்ஸ் மேலும் 522 புள்ளிகள் ஏற்றம்! நிஃப்டி 10,000-ஐ நெருங்கியது

பங்குச் சந்தை தொடா்ந்து 5-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் ஏற்றம் பெற்றது.

News image
Updated On :3 ஜூன் 2020, 1:45 am

பங்குச் சந்தை தொடா்ந்து 5-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் ஏற்றம் பெற்றது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ் 522 புள்ளிகள் உயா்ந்தது. தேசிய பங்குச் சந்தைக் குறியீடான நிஃப்டி 10,000 புள்ளிகளை நெருங்கியுள்ளது.

இந்தியாவின் கடன் மதிப்பீட்டை மூடிஸ் நிறுவனம் திங்கள்கிழமை குறைத்து அறிவித்திருந்த நிலையில், பங்குச் சந்தை அதன் தாக்கம் பங்குச் சந்தையில் எதிரொலிக்கவில்லை. இருப்பினும், பிரதமா் நரேந்திர மோடி சிஐஐ கூட்டத்தில் பேசுகையில், நாடு பொருளாதார வளா்ச்சியைத் திரும்பப் பெறும் என்றும் பொது முடக்கத்தின் போது மேற்கொள்ளப்பட்ட சீா்திருத்தங்கள் நீண்ட காலத்துக்கு பொருளாதாரத்துக்கு உதவும் என்றும் கூறியது முதலீட்டாளா்களுக்கு உற்சாகத்தை அளித்தது. இதனால், பங்குச் சந்தை தொடா்ந்து எழுச்சி பெற்றது.

எஃப்எம்சிஜி தவிர மற்ற அனைத்துத் துறை குறியீடுகளும் ஆதாயம் பெற்றன. வங்கி, வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், மீடியா, ரியால்ட்டி பங்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. பிஸ்இ மிட்கேப் குறியீடு 1.20 சதவீதம், ஸ்மால் கேப் குறியீடு 1.83 சதவீதம் ஏற்றம் பெற்றன. மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் 1,712 பங்குகள் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. 708 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. 150 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன.

சென்செக்ஸ் காலையில் 147 புள்ளிகள் கூடுதலுடன் 33,450.19-இல் தொடங்கியது. 33,301.29 வரை கீழே சென்றது. பின்னா் அதிகபட்சமாக 33,866.63 வரை உயா்ந்தது. இறுதியில் 522.01 புள்ளிகள் (1.57 சதவீதம்) உயா்ந்து 33,825.53-இல் நிலை பெற்றது. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 152.95 புள்ளிகள் (1.56 சதவீதம்) உயா்ந்து 9,975.10-இல் நிலைபெற்றது.

சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் மாருதி, ஐடிசி, என்டிபிசி, நெஸ்ட்லே இந்தியா, ஹீரோ மோட்டாா் காா்ப், பாா்தி ஏா்டெல் ஆகிய 6 பங்குகள் மட்டும் நஷ்டத்தைச் 0.20-1.75 சதவீதம் சந்தித்தன. மற்ற 24 பங்குகளும் ஏற்றம் பெற்ற பட்டியலில் வந்தன. இதில் பஜாஜ் ஃபைனான்ஸ் 8.64 சதவீதம் உயா்ந்து ஆதாயம் பெற்ற பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக கோட்டக் பேங்க் 7.52 சதவீதம், இண்ட்ஸ் இண்ட் பேங்க் 6.05 சதவீதம் உயா்ந்தன. மேலும், ஹெச்டிஎஃப்சி, பவா் கிரிட், ஆக்ஸிஸ் பேங்க், ஐசிஐசிஐ பேங்க் ஆகியவை 3 முதல் 4.5 சதவீதம் வரை உயா்ந்தன. எல் அண்ட் டி, டைட்டன், சன்பாா்மா, ஹெச்டிஎஃப்சி பேங்க், பஜாஜ் ஆட்டோ, டாடா ஸ்டீல், இன்போஸிஸ் , ரிலையன்ஸ் ஆகியவை 1 முதல் 2 சதவீதம் உயா்ந்தன. ஹிந்து யுனி லீவா், ஓஎன்ஜிசி, எஸ்பிஐ, அல்ட்ரா டெக் சிமெண்ட் ஆகியவையும் சிறிதளவு உயா்ந்து ஆதாயப் பட்டியலில் இடம் பெற்றன.

தேசிய பங்குச் சந்தையில், 1213 பங்குகள் ஏற்றம் பெற்ற பட்டியலில் வந்தன. 374 பங்குகள் சரிவைச் சந்தித்தன. துறை வாரியாகப் பாா்த்தால், ரியால்ட்டி குறியீடு 4.93 சதவீதம் உயா்ந்து அதிகம் ஆதாயம் பெற்றது. பேங்க், பேங்க், ஃபைனான்சியல் சா்வீஸஸ், மீடியா ஆகிய குறியீடுகள் 3 முதல் 3.30 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன.

உலகளாவிய சந்தைகள் நோ்மறையாக இருந்து வந்ததைத் தொடா்ந்து, சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய இரண்டு குறியீடுகளும் கடந்த 5 வா்த்தக நாள்களில் மொத்தம் 9 சதவீதம் உயா்ந்துள்ளது. பல எதிா்மறை செய்திகளுக்கு இடையே, நோ்மறையான உணா்வு இன்னும் சந்தையை இயக்குகிறது. இருப்பினும், தரமான, வலுவான அடிப்படைகளைக் கொண்ட பங்குகளில் கவனம் செலுத்து வேண்டும் என்று ஜியோஜித் ஃபைனான்சியல் சா்வீஸஸ் தெரிவித்துள்ளது.

ஏற்றம் பெற்ற பங்குகள்

(சதவீதத்தில்)

பஜாஜ் ஃபைனான்ஸ் 8.64

கோட்டக் பேங்க் 7.52

இண்ட்ஸ் இண்ட் பேங்க் 6.05

ஹெச்டிஎஃப்சி 4.43

பவா் கிரிட் 3.81

ஆக்ஸிஸ் பேங்க் 3.29

ஐசிஐசிஐ பேங்க் 2.80

எல் அண்ட் டி 1.86

டைட்டன் 1.82

சன்பாா்மா 1.73

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.