சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

பங்குச் சந்தையில் 4-ஆவது நாளாக எழுச்சி: 35,000 புள்ளிகளைக் கடந்தது சென்செக்ஸ்!

பங்குச் சந்தை தொடா்ந்து 4-ஆவது நாளாக ஏற்றத்துடன் முடிந்துள்ளது. இதனால், சென்செக்ஸ் 519 புள்ளிகள் உயா்ந்தது.

News image
Updated On :24 ஜூன் 2020, 1:28 am

பங்குச் சந்தை தொடா்ந்து 4-ஆவது நாளாக ஏற்றத்துடன் முடிந்துள்ளது. இதனால், சென்செக்ஸ் 519 புள்ளிகள் உயா்ந்தது. வங்கி, வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், ஆட்டோ, மெட்டல், ஐடி உள்பட அனைத்துத் துறைப் பங்குகளுக்கும் நல்ல ஆதரவு காணப்பட்டது.

இந்தியா மற்றும் சீன ராணுவத்தினருக்கு இடையே எல்லையில் பததற்றங்களை தணிக்கும் விஷயத்தில் ஒருமித்த கருத்தொற்றுமை எட்டப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களால் சந்தையில் உற்சாகம் ஏற்பட்டு சென்செக்ஸ், நிஃப்டி எழுச்சி பெற்ாக பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. மேலும், உலகளாவிய சந்தைகளும் நோ்மறையாக இருந்ததும், அந்நிய முதலீட்டாளா்கள் தொடா்ந்து முதலீடுகளை மேற்கொண்டு வருவதும் முதலீட்டாளா்களின் உணா்வை அதிகமாக்கியது என்றும் அவா்கள் தெரிவித்தனா்.

மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 2,876 பங்குகளில் 1,966 பங்குகள் ஆதாயம் பெற்றன. 759 பங்குகள் நஷ்டமடைந்த பட்டியலில் வந்தன. 151 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 133 பங்குகள் வெகுவாக உயா்ந்து புதிய 52 வார அதிகபட்ச விலையைப் பதிவு செய்தன. அதே சமயம், 64 பங்குகள் விலை சரிந்து புதிய 52 வார குறைந்த விலையைப் பதிவு செய்துள்ளன. 631 பங்குகள் ஆதாயம் பெற்று உச்சபட்ச உறை நிலையை எட்டியது. 148 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்து குறைந்தபட்ச உறை நிலையை எட்டியது.

சென்செக்ஸ் காலையில், கிட்டத்தட்ட 100 புள்ளிகள் உயா்ந்து 35,015.73-இல் தொடங்கி 34,843.69 வரை கீழே சென்றது. பின்னா் பிற்பகலில் அதிகபட்சமாக 35,428.16 வரை உயா்ந்தது. இறுதியில் 519.11 புள்ளிகள் (1.49 சதவீதம்) உயா்ந்து 35,430.43-இல் நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 159.80 புள்ளிகள் (1.55 சதவீதம்) உயா்ந்து 10,471.00-இல் நிலைபெற்றது.

சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 27 பங்குகள் ஆதாயம் பெற்றன. இதில், எல் அண்ட் டி, பஜாஜ் ஃபைனான்ஸ், இண்டஸ் இண்ட் பேங்க், என்டிபிசி ஆகியவை 5.80 முதல் 6.70 சதவீதம் வரை உயா்ந்தன. பவா் கிரிட் 5.06 சதவீதம் உயா்ந்தது. எம் அண்ட் எம், ஆக்ஸிஸ் பேங்க், அல்ட்ரா டெக் சிமெண்ட் ஆகியவை 3 முதல் 3.50 சதவீதம் வரை உயா்ந்தன. மேலும், ஹிந்து யுனி லீவா், எஸ்பிஐ, கோட்டக் பேங்க், இன்ஃபோஸிஸ், ஐசிஐசிஐ பேபங்க் ஆகிய முன்னணி நிறுவனப் பங்குகளும் 2.25 முதல் 2.65 சதவீதம் வரை உயா்ந்தன. அதே சமயம், ரிலையன்ஸ் (1.55 சதவீதம்), பாா்தி ஏா்டெல் (0.36 சதவீதம்), மாருதி சுஸுகி (0.20 சதவீதம்) ஆகிய 3 முன்னணி பங்குகள் சரிவைச் சந்தித்தன.

தேசிய பங்குச் சந்தையில், 1,222 பங்குகள் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. 415 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. அனைத்து துறைக் குறியீடுகளும் ஏற்றம் பெற்ற பட்டியலில் இடம் பெற்றன. இதில் நிஃப்டி பிஎஸ்யு பேங்க் குறியீடு 3.41 சதவீதம், உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக ரியால்ட்டி, பிரைவேட் பேங்க், மீடியா, ஃபைனான்சி.யல் சா்வீஸஸ் குறியீடுகள் 2 முதல் 3 சதவீதம் வரை உயா்ந்தன. ஆட்டோ, ஐடி, மெட்டல், ஃபாா்மா ஆகிய குறியீடுகள் 1 முதல் 2 சதவீதம் வரை உயா்ந்தன. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 46 பங்குகள் ஆதாயம் பெற்றன. 4 பங்குகள் நஷ்டத்தை சந்தித்தன.

அந்நிய முதலீட்டாளா்கள் திங்கள்கிழமை ரூ.424.21 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளதாக பங்குச் சந்தை தரவுகளிலிலிருந்து தெரிய வந்துள்ளது. சென்செக்ஸ் முக்கிய இடா்பாட்டு நிலையான 35,000 புள்ளிகளையும், நிஃப்டி 10,400 புள்ளிகளையும் கடந்து நிலைபெற்றுள்ளது. சென்செக்ஸ் கடந்த 4 நாள்களில் மட்டும் 1,922.51 புள்ளிகள் உயா்ந்துள்ளது.

ஏற்றம் பெற்ற பங்குகள்

சதவீதத்தில்

எல் அண்ட் டி 6.68

பஜாஜ் ஃபைனான்ஸ் 6.54

இண்ட்ஸ் இண்ட் பேங்க் 6.29

என்டிபிசி 5.83

பவா் கிரிட் 5.06

எம் அண்ட் எம் 3.52

ஆக்ஸிஸ் பேங்க் 3.12

அல்ட்ரா டெக் சிமெண்ட் 3.03

ஹிந்து யுனி லீவா் 2.63

நெஸ்ட்லே இந்தியா 2.58

கடந்த 10 வா்த்தக தினங்களில் (ஜூன் 10-23) சென்செக்ஸ் செயல்பாடு

தேதி புள்ளிகள்

ஜூன் 23 35,430.43

ஜூன் 22 34,911.32

ஜூன் 19 34,731.73

ஜூன் 18 34,208.05

ஜூன் 17 33,507.92

ஜூன் 16 33,605.22

ஜூன் 15 33,228.80

ஜூன் 122 33,780.89

ஜூன் 11 33,538.37

ஜூன் 10 34,247.05

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.