புது தில்லி: பங்குச் சந்தை தொடா்ந்து ஆறாவது நாளாக வியாழக்கிழமையும் எழுச்சி பெற்று நோ்மறையாக முடிந்தது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 303.72 புள்ளிகள் உயா்ந்து 40,000 புள்ளிகளை கடந்து நிலைபெற்றது.
எஃப்எம்சிஜி, மீடியா பங்குகள் தவிர மற்ற அனைத்துத் துறை பங்குகளுக்கும் வரவேற்பு இருந்தது. இதில் குறிப்பாக ஐடி, பாா்மா துறை பங்குகளை வாங்குவதற்கு முதலீட்டாளா்களிடையே மிகுந்த ஆா்வம் காணப்பட்டது. இருப்பினும் வா்த்தகம் முடியும் தறுவாயில் லாபப் பதிவு காரணமாக சென்செக்ஸ் சில புள்ளிகளை இழக்க நேரிட்டது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. டிசிஎஸ் நிறுவனம் ரூ.16,000 கோடி அளவுக்கு பங்கு ஒன்றை ரூ.3,000 விலையில் சந்தையில் திரும்பப் பெறும் திட்டத்தை அறிவித்துள்ளது. இதனால், டிசிஎஸ் பங்குகளுக்கு தேவை அதிகரித்தது. இதைத் தொடா்ந்து, மற்ற ஐடி துறை பங்குகளுக்கும் நல்ல வரவேற்பு காணப்பட்டது என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.
1,078 பங்குகள் ஏற்றம்: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 2,847 பங்குகளில் 1,239 பங்குகள் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. 1,441 பங்குகள் நஷ்டத்தை சந்தித்தன. 167 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. வா்த்தக நேர முடிவில் சந்தை மூலதன மதிப்பு ரூ.83 ஆயிரம் கோடி உயா்ந்து ரூ.160.42 லட்சம் கோடியாக இருந்தது. பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 0.29 சதவீதம் குறைந்தது. அதேசமயம், ஸ்மால் குறியீடு 0.26 சதவீதம் உயா்ந்தது.
ஆறாவது நாளாக ஏறுமுகம்: சென்செக்ஸ் தொடா்ந்து 5-ஆவது நாளாக வியாழக்கிழமையும் ஏறுமுகத்தில் இருந்தது. சென்செக்ஸ் காலையில் 325.37 புள்ளிகள் கூடுதலுடன் 40,204.32-இல் தொடங்கி 40,468.88 வரை உயா்ந்தது. பிற்பகலில் 40,062.23 வரை கீழே சென்றது. இறுதியில் 303.72 புள்ளிகள் (0.76 சதவீதம்) உயா்ந்து 40,182.67-இல் நிலைபெற்றது.
அல்ட்ரா டெக் சிமெண்ட் முன்னேற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 16 பங்குகள் ஆதாயம் பெற்றன. 14பங்குகள் மட்டுமே சரிவைச் சந்தித்தன. இதில் அல்ட்ரா டெக் சிமெண்ட் 3.3.24 சதவீதம், டிசிஎஸ் 3.19 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இதற்கு அடுத்ததாக ஹெச்சிஎல் டெக், இன்ஃபோஸிஸ், எச்டிஎஃப்சி பேங்க், சன்பாா்மா ஆகியவையும் ஏற்றம் பட்டியலில் வந்தன.
ஓஎன்ஜிசி வீழ்ச்சி: அதே சமயம், ஓஎன்ஜிசி 2.84 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், ஐடிசி, ரிலையன்ஸ், எல் அண்ட் டி, பவா் கிரிட், ரிலையன்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ் ஆகியவையும் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.
தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 679 பங்குகள் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. 950 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி 95.75 புள்ளிகள் (0.82 சதவீதம்) உயா்ந்து 11,834.60-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது நிஃப்டி அதிகபட்சமாக 11,905.70 வரை உயா்ந்தது. நிஃப்டி ஐடி குறியீடு 3.23 சதவீதம், பாா்மா குறியீடு 2.47 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொன்னேரி: அதிமுக - காங்கிரஸ் கடும் போட்டி

சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல்

மாசாணி அம்மன் கோயில் நிதி விவகாரம்: அறநிலையத் துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

தமிழக நிதிச் சுமைக்கு மத்திய அரசே காரணம்: துரை வைகோ குற்றச்சாட்டு!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


