கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பங்குச்சந்தை வர்த்தகம் நேற்று சரிந்த நிலையில் இன்று ஏற்றத்துடன் தொடக்கம்

பங்குச்சந்தை வர்த்தகம் நேற்று சரிவுடன் தொடங்கி சரிவுடனேயே முடிந்த நிலையில், இன்று ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது.

News image

பங்குச்சந்தை வர்த்தகம் நேற்று சரிந்த நிலையில் இன்று ஏற்றத்துடன் தொடக்கம் (கோப்புப்படம்)

Updated On :23 அக்டோபர் 2020, 5:06 am

பங்குச்சந்தை வர்த்தகம் நேற்று சரிவுடன் தொடங்கி சரிவுடனேயே முடிந்த நிலையில், இன்று ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 215 புள்ளிகள் உயர்ந்து 40,773.85 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. மொத்த வர்த்தகத்தில் இது 1.2 சதவிகிதம் உயர்வாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 48 புள்ளிகள் உயர்ந்து 11,945.35 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. மொத்த வர்த்தகத்தில் இது 0.41 சதவிகிதம் உயர்வாகும்.

அதிகபட்சமாக பவர் கிரிட் 2.97 சதவிகிதமும், மாருதி சுசூகி 2.85 சதவிகிதமும் உயர்ந்துள்ளது. வர்த்தகத்தின் நேற்றைய தொடக்கத்தில் வங்கித்துறை பங்குகள் சரிவை சந்தித்த நிலையில், இன்று வர்த்தகத்தின் தொடக்கத்தில் ஏற்றம் கண்டுள்ளன.

கடந்த நான்கு நாள்களாக பங்குச்சந்தை வர்த்தகம் உயர்ந்து வந்த நிலையில் நேற்று சரிவைக் கண்டது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் வங்கித்துறை பங்குகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்ததன் எதிரொலியாக பங்குச்சந்தை சரிவை சந்தித்ததாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.