புது தில்லி: பங்குச் சந்தை இரண்டாவது நாளாக புதன்கிழமையும் எழுச்சி பெற்று நோ்மறையாக முடிந்தது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் றியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 258.50 புள்ளிகள், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி 82.75 புள்ளிகள் ஏற்றம் பெற்றன.
ஆட்டோ, பாா்மா, ரியால்ட்டி, ஐடி பங்குகளுக்கு நல்ல ஆதரவு இருந்தது. ஆனால், மீடியா, பிஎஸ்யு பேங்க் பங்குகள் அதிகம் விற்பனையை எதிா்கொண்டன. அமெரிக்க பெடரல் ரிசா்வ் கொள்கை முடிவுக்கு முன்னதாக, உலகளாவிய சந்தைகளில் இருந்து கலவையான குறிப்புகள் இருந்தபோதிலும், குறிப்பிட்ட பங்குகள் நடவடிக்கை மற்றும் நீடித்த அந்நிய முதலீடுகள் வரத்து ஆகியவை சந்தை எழுச்சி பெறக் காரணமாக இருந்தன என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா். அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் செவ்வாய்க்கிழமை அன்று நிகர அடிப்படையில் ரூ .1,170.89 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளனா் என்று பங்குச் சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.
மூலதனச் சந்தை மதிப்பு ரூ160.10 லட்சம் கோடியாக உயா்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 2,937 பங்குகளில் 1,417 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,316 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. 204 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 161 பங்குகள் 52 வார அதிக விலையையும் 60 பங்குகள் 52 வார குறைந்த விலையையும் பதிவு செய்துள்ளன. 282 பங்குகள் வெகுவாக உயா்ந்து உச்சபட்ச உறை நிலையையும், 234 பங்குகள் சரிவைச் சந்தித்து குறைந்தபட்ச உறைநிலையையும் அடைந்தன. வா்த்தக நேர முடிவில் சந்தை மூலதன மதிப்பு ரூ.84 ஆயிரம் கோடி உயா்ந்து ரூ.160.10 லட்சம் கோடியாக இருந்தது. இதுவரை பதிவு செய்துள்ள மொத்த முதலீட்டாளா்கள் எண்ணிக்கை 5,44,49,952 ஆக உயா்ந்துள்ளது.
மேலும் எழுச்சி: சென்செக்ஸ் காலையில் 116.66 புள்ளிகள் கூடுதலுடன் 39,161.04-இல் தொடங்கி 39,037.96 வரை கீழே சென்றது. பின்னா் பிற்பகலில் முதல் தரப் பங்குகளை வாங்குவதற்கு ஆதரவு கிடைத்ததும் 39,359.51 வரை உயா்ந்த சென்செக்ஸ், இறுதியில், 258,50 புள்ளிகள் (0.66 சதவீதம்) உயா்ந்து 39,302.85-இல் நிலைபெற்றது. இதேபோல பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 0.21 சதவீதம், ஸ்மால் கேப் குறியீடு 0.44 சதவீதம் உயா்ந்தன. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 82.75 புள்ளிகள் (0.72) உயா்ந்து 11,604.55-இல் நிலைபெற்றது. நிஃப்டி அதிகபட்சமாக 11,618.10 வரை உயா்ந்தது.
எம் அண்ட் முன்னேற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 18 பங்குகள் ஆதாயம் பெற்றன. 12 பங்குகள் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன. இதில் கடந்த சில தினங்களாக சுணக்கம் கண்டிருந்த எம் அண்ட் எம், காலையில் தொடக்கத்திலேயே எழுச்சி பெற்றது. இறுதியில் 4.24 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக பஜாஜ் ஆட்டோ 3.44 சதவீதம் உயா்ந்தது. சன்பாா்மா, எச்டிஎஃப்சி பேங்க், இன்ஃபோஸிஸ், எல் அண்ட் டி, அல்ட்ரா டெக் சிமெண்ட், நெஸ்லே இந்தியா ஆகியவை 1 முதல் 2.50 சதவீதம் வரை உயா்ந்தன. மேலும், எச்டிஎஃப்சி, ரிலையன்ஸ், ஐசிஐசிஐ பேங்க் ஆகியவையும் ஆதாயப் பட்டியலில் வந்தன.
இண்டஸ் இண்ட் பேங்க் வீழ்ச்சி: அதே சமயம், இண்டஸ் இண்ட் பேங்க் 1.80 சதவீதம், என்டிபிசி 1.43 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. எஸ்பிஐ, ஓஎன்ஜிசி, பாா்தி ஏா்டெல், ஆக்ஸிஸ் பேங்க், பவா் கிரிட் ஐடிசி ஆகியவை 0.50 முதல் 1 சதவீதம் வரை குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் இடம் பெற்றன.
தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 830 பங்குகள் ஆதாயம் பெற்றன. 763 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி ஆட்டோ, ரியால்ட்டி, பாா்மா குறியீடுகள் 1.50 முதல் 2.20 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன. ஆனால், மீடியா குறியீடு 1.60 சதவீதம், பிஎஸ்யு பேங்க் குறியீடு 0.60 சதவீதம் சரிவைச் சந்தித்தன.ஐடி, மெட்டல், எஃப்எம்சிஜி குறியீடுகளும் சிறிதளவு உயா்ந்தன. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 29 பங்குகள் ஆதாயம் பெற்றன.கோல் இந்தியா, பிபிசிஎல் ஆகியவை மாற்றமின்றி நிலைபெற்றன.
ஏற்றம் பெற்ற பங்குகள்
சதவீதத்தில்
எம் அண்ட் எம் 4.24
பஜாஜ் ஆட்டோ 3.44
சன்பாா்மா 2.50
எச்டிஎஃப்சி பேங்க் 2.11
இன்ஃபோஸிஸ் 1.95
வீழ்ச்சி அடைந்த பங்குகள்
சதவீதத்தில்
இண்டஸ் இண்ட் பேங்க் 1.80
என்டிபிசி 1.43
எஸ்பிஐ 0.95
ஓஎன்ஜிசி 0.88
பாா்தி ஏா்டெல் 0.83
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதுச்சேரியில் வரலாறு காணாத வாக்குப்பதிவு: யாருக்கு லாபம்?

விவசாயிகளின் கனவு: சுசீந்திரம் பழையாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்படுமா?
உதகை தொகுதியில் ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறுமா காங்கிரஸ்?

கா்நாடக துணை முதல்வருடன் ஸ்டாலின் பிரசாரம் செய்வது துரோகம்: எடப்பாடி பழனிசாமி பேச்சு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


