சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

இடுக்கி மாவட்டத்தில் தொழிலாளர்கள் பற்றாக்குறை: அறுவடை செய்யாமல் வீணாகும் ஏலக்காய்

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் விவசாயத் தொழிலாளர்கள் பற்றாக்குறையால் ஏலக்காய் தோட்டங்களில் அறுவடைப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

News image
Updated On :30 செப்டம்பர் 2020, 9:13 pm

தேனி: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் விவசாயத் தொழிலாளர்கள் பற்றாக்குறையால் ஏலக்காய் தோட்டங்களில் அறுவடைப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இடுக்கி மாவட்டத்தில் வண்டிப்பெரியாறு, பீர்மேடு, உடும்பன்சோலை, தேவிகுளம் ஆகிய வட்டாரங்களில் 1.25 லட்சம் ஏக்கரில் ஏலக்காய் சாகுபடி நடைபெறுகிறது. இங்கு நிலவும் தொழிலாளர்கள் பற்றாக்குறையால், தேனி மாவட்டப் பகுதிகளிலிருந்து தினமும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் ஜீப்கள் மூலம் அங்குள்ள ஏலக்காய் தோட்டங்களுக்கு வேலைக்குச் சென்று வருவர்.

இந்த நிலையில், கரோனா தடுப்பு பொதுமுடக்கம் காரணமாக கடந்த மார்ச் 19-ஆம் தேதி முதல், தேனி மாவட்டம் வழியாக கேரளத்துக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், தேனி மாவட்டப் பகுதிகளிலிருந்து இடுக்கி மாவட்டத்திலுள்ள ஏலக்காய் தோட்டங்களுக்கு தொழிலாளர்கள் சென்றுவர முடியவில்லை. இடுக்கி மாவட்டத்தில் குறைந்த எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் மட்டும் விவசாயப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தொழிலாளர் பற்றாக்குறையால் அங்கு ரூ. 450-ஆக இருந்த தினக் கூலி, தற்போது ரூ. 700-ஆக உயர்ந்துள்ளது.

பயனற்ற இ-பாஸ் அனுமதி:  தற்போது, தேனி மாவட்டப் பகுதிகளிலிருந்து குமுளி வழியாக கேரளத்திற்குச் சென்று வர இடுக்கி மாவட்ட நிர்வாகம் சார்பில் இ-பாஸ் வழங்கப்படுகிறது. ஆனால் இ-பாஸ் பெற்றுச் செல்லும் விவசாயிகள், இடுக்கி மாவட்டத்தில் தங்களது தோட்டங்களிலுள்ள வீடுகளில் 14 நாள்கள் வரை தம்மை தனிமைப்படுத்திக் கொண்ட பிறகே விவசாயப் பணிகளை பார்வையிட தோட்டத்திற்குச் செல்ல வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

நறுமணப் பொருள் வாரியம் சார்பில் நடைபெறும் ஏலக்காய் மின்னணு ஏல வர்த்தகத்துக்கு இடுக்கி - தேனி மாவட்டம் இடையே சென்று வருவதற்கு, ஏலக்காய் வியாபாரிகள் மற்றும் ஏல நிறுவனப் பணியாளர்களுக்கு ஒரு நாள் மட்டும் செல்லத்தக்க இ-பாஸ் வழங்கப்படுகிறது. இந்த பாஸ் நடைமுறைகளால் தேனி மாவட்டப் பகுதிகளிலுள்ள ஏலக்காய் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு எவ்வித பயனுமில்லை என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

ஏலக்காய் அறுவடை பாதிப்பு: தேனி மாவட்டப் பகுதிகளிலிருந்து இடுக்கி மாவட்டத்திலுள்ள ஏலக்காய் தோட்டங்களுக்கு தொழிலாளர்கள் சென்றுவர முடியாததால், வேலையாள்கள் பற்றாக்குறை ஏற்பட்டு ஏலக்காய் அறுவடைப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. அறுவடைப் பருவத்தில் உள்ள ஏலக்காய்கள் பழுத்து வெடித்து காணப்படுகிறது. மேலும் எலி மற்றும் தவளைகள் செடியின் தட்டை மற்றும் காய் சரங்களை துண்டித்துவிடுவதால் அறுவடை செய்ய முடியாமல் ஏலக்காய்கள் வீணாகிறது. இதனால் ஏலக்காய் விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்திக்கும் நிலையில் உள்ளனர்.

எனவே தேனி-இடுக்கி மாவட்டம் இடையே விவசாயப் பணிகளுக்காக தொழிலாளர்களை அனுமதிக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

ஏலக்காய் விலை நிலவரம்: இடுக்கி மாவட்டம், புத்தடியில் எஸ்.எம்.டி.சி., ஏல நிறுவனம் சார்பில் பெற்ற மின்னணு ஏல வர்த்தகத்தில் ஏலக்காய் சராசரி தரம் கிலோ ரூ.1,510.45-க்கும், உயர் தரம் கிலோ ரூ.1,888-க்கும் விற்னையானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.