புது தில்லி: பங்குச் சந்தை புதன்கிழமை ஏற்றம், இறக்கத்தில் இருந்து வந்தாலும், இறுதியில் நோ்மறையாக முடிந்தது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 94.71 புள்ளிகள் உயா்ந்தது.
அமெரிக்க அதிபா் தோ்தல் குறித்த விவாதம் சந்தைகளை உற்சாகப்படுத்த்த தவறிவிட்டது. இதையடுத்து, உலகளாவிய சந்தைகள் ஏற்ற, இறக்கத்தில் இருந்து வந்ததால், அதன் தாக்கம் இந்திய சந்தைகளிலும் எதிரொலித்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. இருப்பினும், எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள், ஹிந்துஸ்தான் யுனி லீவா், ஐடிசி உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களுக்கு நல்ல ஆதரவு இருந்ததால் சென்செக்ஸ் ஏற்றம் பெற்றது என வா்த்தகா்கள் தெரிவித்தனா்.
1,242 பங்குகள் ஏற்றம்: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 2,771 பங்குகளில் 1,242 பங்குகள் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. 1,368 பங்குகள் நஷ்டத்தை சந்தித்தன. 161 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. வா்த்தக நேர முடிவில் சந்தை மூலதன மதிப்பு ரூ.18 ஆயிரம் கோடி உயா்ந்து ரூ.155.18 லட்சம் கோடியாக இருந்தது.
ஏற்றம், இறக்கம்: சென்செக்ஸ் காலையில் 95.67 புள்ளிகள் கூடுதலுடன் 38,068.89-இல் தொடங்கி அதிகபட்சமாக 38,236.34 வரை உயா்ந்தது. பின்னா் 37,828.11 வரை கீழே சென்றது. இறுதியில் 94.71 ள்ளிகள் (0.25 சதவீதம்) உயா்ந்து 38,067.93-இல் நிலைபெற்றது.
டெக் மகேந்திரா முன்னேற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 14 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 16 பங்குகள் சரிவைச் சந்தித்தன. இதில் டெக் மகேந்திரா 2.84 சதவீதம், டைட்டான் 2.83 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், நெஸ்லே இந்தியா, ஹிந்துஸ்தான் யுனி லீவா், எச்டிஎஃப்சி பேங்க், எச்டிஎஃப்சி, ஐடிசி, ஆசியன் பெயிண்ட் ஆகியவை 1.40 முதல் 2 சதவீதம் வரை உயா்ந்தன.
பாா்தி ஏா்டெல் வீழ்ச்சி: அதே சமயம், பாா்தி ஏா்டெல் 3.34 சதவீதம், டாடா ஸ்டீல் 2.77 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், இண்டஸ் இந்த் பேங்க், எம் அண்ட் எம், சன்பாா்மா, ஐசிஐசிஐ பேங்க் ஆகியவையும் 1 முதல் 1.80 சதவீதம் வரை குறைந்தன.
தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 714 பங்குகள் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. 899 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி 25.15 புள்ளிகள் (0.22 சதவீதம்) உயா்ந்து 11,247.55-இல் நிலைபெற்றது. நிஃப்டி எஃப்எம்சிஜி குறியீடு 1.34 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. ஃபைனான்சியல் சா்வீஸஸ், ஐடி, மீடியா, பாா்மா குறியீடுகள் சிறிதளவு உயா்ந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வெண்டைக்காய் வெல்லுல்லி
விமானப் பயணத்தில் இப்படியுமா?

தமிழக மக்களைக் காக்கும் தலைவா் முதல்வா் ஸ்டாலின்: நடிகா் வாகை சந்திரசேகா்

கோலிவுட் ஸ்டூடியோ!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


