தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

ஒன்பிளஸ்-இன் புதுவரவு 'ஸ்மார்ட் போன் அல்ல'! என்னவாக இருக்கும்?

ஸ்மார்ட் போன் அல்லாத ஒரு புதிய மின்னணு சாதனத்தை ஒன்பிளஸ் நிறுவனம் நாளை வெளியிட உள்ளது. இந்நிலையில் இதுகுறித்த குறுகிய வீடியோ கிளிப்பை ஒன்பிளஸ், தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளது.

News image
Updated On :2 மார்ச் 2020, 7:04 am

DIN

ஸ்மார்ட் போன் அல்லாத ஒரு புதிய மின்னணு சாதனத்தை ஒன்பிளஸ் நிறுவனம் நாளை வெளியிட உள்ளது. இந்நிலையில் இதுகுறித்த குறுகிய வீடியோ கிளிப்பை ஒன்பிளஸ், தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

சீனத் தயாரிப்பான ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களிடையே தனி வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், நிறுவனம் புதிய மின்னணு சாதனம் ஒன்றை நாளை(மார்ச் 3) அறிமுகப்படுத்த உள்ளது. ஆனால், இந்தத் தயாரிப்பு 'ஸ்மார்ட் போன் அல்ல' என்ற தகவல் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. 

இத்துடன் கூடுதலாக, ஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 8 ப்ரோ ஸ்மார்ட் போன்களை வரும் மாதங்களில் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

வரவிருக்கும் ஒன்பிளஸ் 8 சீரிஸ் ஸ்மார்ட் போன்கள் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 சிப் மற்றும் ஆண்ட்ராய்டு 10 தளத்தில் இயங்குகிறது. மேலும், இரட்டை பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளே, குவாட்-கேமரா அமைப்புடன் மூன்று லென்ஸ்கள் உள்ளிட்ட சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. 

எனினும், ஒன்பிளஸ் நிறுவனம் நாளை அறிமுகப்படுத்தும் புதிய சாதனம் என்னவாக இருக்கும் என்று வாடிக்கையாளர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.