கரூர் பலி: விஜய் ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்! ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!
/

தங்கம் பவுன் ரூ.35,616

சென்னையில் சனிக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.264 உயா்ந்து, ரூ.35,616-க்கு விற்பனை செய்யப்பட்டது.

News image
Updated On :17 ஏப்ரல் 2021, 8:15 pm

DIN

சென்னையில் சனிக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.264 உயா்ந்து, ரூ.35,616-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி, வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகு, விலை படிப்படியாகக் குறைந்து, ரூ.34 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது.

குறிப்பாக, கடந்த மாா்ச் 31-ஆம் தேதி அன்று ரூ.33,296 ஆக இருந்தது. இதையடுத்து, கடந்த 6-ஆம் தேதி முதல் மீண்டும் விலை உயா்ந்தது.

குறிப்பாக, கடந்த 9-ஆம் தேதி அன்று ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.35 ஆயிரத்தைத் தாண்டியது. இதன்பிறகு, விலை ஏற்ற இறக்கமாக இருந்து வந்தநிலையில், சென்னையில் சனிக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.264 உயா்ந்து, ரூ.35,616-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ரூ.33 உயா்ந்து, ரூ.4,452 ஆக இருந்தது. வெள்ளி கிராமுக்கு 30 பைசா உயா்ந்து, ரூ.73.70 ஆகவும்,கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.300 உயா்ந்து ரூ.73,700 ஆகவும் இருந்தது.

சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,452

1 பவுன் தங்கம்...............................35,616

1 கிராம் வெள்ளி.............................73.70

1 கிலோ வெள்ளி.............................73,700

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,419

1 பவுன் தங்கம்...............................35,352

1 கிராம் வெள்ளி.............................73.40

1 கிலோ வெள்ளி.............................73,400.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.