6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

எச்டிஎஃப்சியின் நிகர லாபம் 5,331 கோடியாக உயர்வு

நாட்டின் முதன்மையான அடமானக்கடன் வழங்கும் நிறுவனமான  எச்டிஎஃப்சி  நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில்  நிகர லாபம்  5,331 கோடியாக உயர்ந்துள்ளது.

News image
எச்டிஎஃப்சியின் நிகர லாபம் 5,331 கோடியாக உயர்வு
Updated On :2 ஆகஸ்ட் 2021, 7:53 am

DIN

நாட்டின் முதன்மையான அடமானக்கடன் வழங்கும் நிறுவனமான  எச்டிஎஃப்சி  நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில்  நிகர லாபம்  5,331 கோடியாக உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டின் இதே காலாண்டில் நிகர லாபம்  4,059 கோடியாக இருந்து தற்போது  5,331 கோடியாக உயர்ந்ததால்  இந்நிறுவனம்  31 சதவீத வளர்ச்சியைக்  கண்டிருக்கிறது.

கடந்த ஆண்டின் மொத்த நிகர லாபம் 3,614 கோடியாக இருந்து தற்போது இந்த காலாண்டின் முடிவில்  5,041 கோடியுடன் 39 சதவீத வளர்ச்சியை அடைந்திருக்கிறது.

2021 - 2022 நிதியாண்டில்  ஒட்டுமொத்த வருவாய் 29,959 கோடியில் இருந்து 30,997 கோடியாகவும்  உயர்ந்திருக்கிறது.

நிர்வாகத் தரப்பிலிருந்து  அளித்த தகவலில் , ' கரோனா தொற்று காலத்திலும்   வீட்டு கடன்களை  வழங்கி வாடிக்கையாளர்களுக்கு உதவியிருக்கிறோம் தற்போது தொழில்களும் பழைய நிலையில் இருந்து மீண்டுவருகின்றன. இந்நிலையில் கரோனா  மூன்றாவது அலையின் தாக்கம் ஒருவேளை பழைய நிலைக்கே நம்மை தள்ளலாம் " எனத் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.