சென்செக்ஸ் வரலாற்றில் முதன்முறையாக 56 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டி புதிய உச்சத்தை அடைந்தது.
நேற்று(செவ்வாய்க்கிழமை) 55,792.27 புள்ளிகளுடன் முடிந்த மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் புதன்கிழமை காலை 289 புள்ளிகள் அதிகரித்து 56,073 புள்ளிகளில் தொடங்கியது. அதிகபட்சமாக சென்செக் 56,118.57 என்ற புள்ளிகளை எட்டியது. தற்போது (10.50 மணி) 56,045.99 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இதில் அதிகபட்சமாக ஹெச்.டி.எப்.சி வங்கி 1.8% அளவுக்கு வளர்ச்சி கொன்றுள்ளது. ஆக்சிஸ் வங்கி 06%, பஜாஜ் பின்செர்வ் 0.9%, எஸ்பிஐ லைப் 0.7% என்ற அளவில் வளர்ச்சி கண்டுள்ளன.
இதையடுத்து, மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் வரலாறு காணாத அளவுக்கு 56 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டி சாதனை படைத்துள்ளது.
அதுபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் 'நிஃப்டி' 67 புள்ளிகள் அதிகரித்து, 16.681 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
சர்வதேச பயங்கரவாதத்தின் மையப்புள்ளி பாகிஸ்தான்: ராஜ்நாத் சிங்

மே 4, 5-ல் சோளிங்கா் மலைக்கோயில் ரோப்காா் சேவை ரத்து

கந்துலா சுலோச்சனா ராணியாக அனுபமா பரமேஸ்வரன்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


