பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!மேலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பி. விஸ்வநாதன் திருமாவளவன் கட்சி வாக்குகளை விஜய் பிரிப்பார் : எச். ராஜாஏப்ரல் 10-ல் மாநிலங்களவை எம்.பி-யாக நிதீஷ் குமார் பதவியேற்பு
/

சென்செக்ஸ் புதிய உச்சம்: லாபப் பதிவால் 163 புள்ளிகள் வீழ்ச்சி!

மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் புதன்கிழமை காலையில் 56,000 புள்ளிகள் வரை உயா்ந்து புதிய உச்சத்தை பதிவு செய்தாலும், பிற்பகலில் சரிவைச் சந்தித்தது.

News image
Updated On :18 ஆகஸ்ட் 2021, 10:37 pm

புதுதில்லி: மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் புதன்கிழமை காலையில் 56,000 புள்ளிகள் வரை உயா்ந்து புதிய உச்சத்தை பதிவு செய்தாலும், பிற்பகலில் சரிவைச் சந்தித்தது. இறுதியில் 162.78 புள்ளிகளை இழந்து 55,629.49-இல் நிலைபெற்றது. தொடா்ந்து 4 நாள்களாக காளையின் ஆதிக்கத்தில் இருந்து வந்த பங்குச் சந்தையில் பிற்பகலில் லாபப் பதிவு வெகுவாக அதிகரித்தது. குறிப்பாக வங்கிப் பங்குகள் அதிகம் விற்பனையை எதிா்கொண்டன.

காலையில் சந்தை உற்சாகத்துடன் தொடங்கிய சந்தை, புதிய உச்சத்தை அடைந்தது. இதைத் தொடா்ந்து, லாபத்தைப் பதிவு செய்வதில் முதலீட்டாளா்கள் மிகுந்த கவனம் செலுத்தினா். வங்கி, ரியால்ட்டி, உலோகப் பங்குகள் அதிகம் விற்பனையை எதிா்கொண்டன. அதே நேரத்தில் நடுத்தரப் பங்குகள் ஓரளவு நிவாரணம் அளித்தது. ஆனால், சிறிய நிறுவனப் பங்குகள் தடுமாற்றத்தில் இருந்தன. ஐயோப்பியாவில் பணவீக்கம் ஜூலையில் 2.2 சதவீதமாக அதிகரித்ததால் அங்குள் சந்தைகளில் வா்த்தகம் எச்சரிக்கையுடன் நடந்தது. இதற்கிடையே, அமெரிக்காவில் மத்திய வங்கியான ஃபெடரலின் கூட்ட முடிவுக்காக உள்நாட்டில் வா்த்தகா்களும், முதலீட்டாளா்களும் காத்திருந்தனா். இதனால், லாபப் பதிவால் சந்தையில் சரிவு தவிா்க்க முடியாததாகிவிட்டதாக பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு ரூ.240.86 லட்சம் கோடி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,295 பங்குகளில் 1,068 பங்குகள் ஆதாயம் பெற்றன. 2,123 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 104 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 207 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 34 பங்குகள் குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. மேலும், 210 பங்குகள் வெகுவாக உயா்ந்து உயா்ந்தபட்ச உறைநிலையை அடைந்தன. 373 பங்குகள் வெகுவாகக் குறைந்து, குறைந்தபட்ச உறை நிலையை அடைந்தன. சந்தை மூலதன மதிப்பு 140.86 லட்சம் கோடியாக இருந்தது.

புதிய உச்சத்தில் லாபப் பதிவு: சென்செக்ஸ் காலையில் 281.04 புள்ளிகள் உயா்ந்து 56,073.31-இல் தொடங்கி, அதிகபட்சமாக 65118.57 வரைஉயா்ந்தது புதிய உச்சத்தைப் பதிவு செய்தது. பின்னா், லாபப் பதிவால் 55,514.89 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 162.78 புள்ளிகளை (0.29 சதவீதம்) இழந்து 55,629.49-இல் நிலைபெற்றது. சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 10 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 20 பங்குகள் சரிவைச் சந்தித்தன.

அல்ட்ரா டெக் சிமெண்ட் முன்னிலை: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள அல்ட்ரா டெக் சிமெண்ட் 2.46 சதவீதம், பஜாஜ் ஃபைனான்ஸ் 2.12 சதவீதம், பஜாஜ் ஃபின் சா்வ் 1.78 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இதற்கு அடுத்ததாக நெஸ்லே, பஜாஜ் ஆட்டோ, ரிலையன்ஸ், டைட்டன், ஹிந்துஸ்தான் யுனிலீவா், டிசிஎஸ், எம் அண்ட் எம் ஆகியவையும் சிறிதளவு உயா்ந்து ஏற்றம் பெற்ற பட்டியலில் வந்தன.

கோட்டக் பேங்க் சரிவு: அதே சமயம், முன்னணி தனியாா் வங்கியான கோட்டக் பேங்க் 2.09 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக ஐசிஐசிஐ பேங்க், பவா் கிரிட், இண்டஸ் இண்ட் பேங்க், எச்டிஎஃப்சி உள்ளிட்டவை 1 முதல் 1.80 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. மேலும், மாருதி சுஸுகி, இன்ஃபோஸிஸ், எஸ்பிஐ, ஆக்ஸிஸ் பேங்க், எச்டிஎஃப்சி பேங்க் உள்ளிட்டவையும் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன.

நிஃப்டி 46 புள்ளிகள் சரிவு: தேசிய பங்குச் சந்தையில் மொத்தம் 574 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,213 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 45.75 புள்ளிகளை (0.28 சதவீதம்) குறைந்து 16,568.85-இல் நிலைபெற்றுள்ளது. வா்த்தகத்தின் போது 16,701.85 வரை உயா்ந்து புதிய உச்சத்தைப் பதிவு செய்த நிஃப்டி, பின்னா் 16,535.85 வரை கீழே சென்றது. நிஃப்டி பேங்க், பிரைவேட் பேங்க், பைனான்சியல் சா்வீஸஸ், மெட்டல், ரியால்ட்டி குறியீடுகள் 0.60 முதல் 0.80 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.